»   »  ஜிஷா மரணம் ஏற்படுத்திய தாக்கம்: 1௦௦௦ ஆதரவற்ற பெண்களுக்கு வீடுகள் கட்டித்தரும் திலீப்!

ஜிஷா மரணம் ஏற்படுத்திய தாக்கம்: 1௦௦௦ ஆதரவற்ற பெண்களுக்கு வீடுகள் கட்டித்தரும் திலீப்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மலையாள நடிகர் திலீப் ஆதரவற்ற மற்றும் கணவனை இழந்த 1௦௦௦ பெண்களுக்கு வீடுகள் கட்டித்தர முன்வந்துள்ளார்.

மலையாள முன்னணி நடிகர்களில் திலீப்புக்கும் தனியிடமுண்டு. அவ்வபோது சமூக சேவையில் ஈடுபட்டு வரும் திலீப் அடுத்ததாக செய்யவுள்ள காரியம் அவரது ரசிகர்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளும்படி அமைந்துள்ளது.

திலீப் செய்யப்போகும் இந்த செயலுக்கு மலையாளத் திரையுலகினர் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

1௦௦௦ வீடுகள்

அதாவது ஆதரவற்ற மற்றும் கணவனை இழந்த சுமார் 1000 பெண்களுக்கு இலவச வீடுகளை சுமார் 5.5 லட்சம் செலவில் கட்டிக்கொடுக்க திலீப் முன்வந்திருக்கிறார். இதற்காக 55 கோடிகள் வரை செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

பாதுகாப்பான இல்லம்

இந்தத் திட்டத்திற்கு பாதுகாப்பான இல்லம் என்று பெயர் வைத்துள்ளனர். இதற்கு கேரளாவின் எந்தப் பகுதியில் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களுக்கு சொந்தமாக 2 சென்ட் நிலம் இருக்க வேண்டும்.

 

 

ஜிஷா

சமீபத்தில் அதிர்வை ஏற்படுத்திய சட்டக்கல்லூரி மாணவி ஜிஷாவின் மரணம்தான் தனது இந்த செயலுக்கு காரணம் என்று திலீப் கூறுகிறார். இதுகுறித்து அவர் ஜிஷா தங்கியிருந்த பாதுகாப்பற்ற வீடும் அவரது மரணத்திற்கு ஒரு காரணம் என அறிந்தேன். இதுபோல பல பெண்கள் பாதுகாப்பற்ற வீடுகளில் வசித்து வருகிறார்கள்.

தொண்டு நிறுவனங்களுடன்

அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என சில தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இந்த திட்டத்தை தொடங்கியிருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

47 வயதாகும் நடிகர் திலீப்புக்கு மீனாட்சி என்ற மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

English summary
Malayalam Actor Dileep help Build 1000 Houses for Deserted Womens.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos