twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹூட்ஹூட் நிவாரண நிதிக்கு 'ரியல்' பவர் ஸ்டார் ரூ.50 லட்சம் நிதி

    By Siva
    |

    ஹைதராபாத்: ஹூட்ஹூட் நிவாரண நிதிக்கு தெலுங்கு திரையுலகின் பவர் ஸ்டாரும், ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் ரூ. 50 லட்சம் நிதி அளித்துள்ளார்.

    ஹூட்ஹூட் புயல் தாக்கி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நிலைக்குலைந்து போயுள்ளது. அங்குள்ள பசுமை நிலங்களில் 80 சதவீத நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் மீண்டும் பழைய நிலைமைக்கு வர சுமார் 20 ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஹூட்ஹூட் நிவாரண நிதிக்கு தெலுங்கு திரையுலகின் பவர் ஸ்டாரும், ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் ரூ. 50 லட்சம் நிதி அளித்துள்ளார்.

    Actor Pawan Kalyan announces Rs 50 lac for cyclone relief work

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    விசாகப்பட்டினம் மற்றும் வடக்கு ஆந்திராவில் ஏற்பட்டுள்ள துயரத்தை பார்த்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். இந்த புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நான் வருந்துகிறேன். இந்த பேரிடர் நேரத்தில் நாம் கட்சி, அரசியல் ஆகியவற்றை தாண்டி முன்வந்து உதவ வேண்டும். மத்திய, மாநில அரசுகள் போதிய நடவடிக்கை எடுத்து வரும் போதிலும் நான் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் அளிக்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளை பவன் கல்யாண் நேரில் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூற உள்ளார். மேலும் நிவாரண பணிகளில் பங்கேற்குமாறு பவன் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    English summary
    Telugu actor and founder president of Jana Sena Party Pawan Kalyan today announced Rs 50 lakh to the Chief Minister's relief fund for taking up relief operations in the aftermath of cyclone Hudhud in Andhra Pradesh.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X