»   »  தவறாக பேசியது தப்புதான்.. வருத்தம் தெரிவித்தார் நடிகர் விஷால்.. சஸ்பெண்ட் வாபஸ்?

தவறாக பேசியது தப்புதான்.. வருத்தம் தெரிவித்தார் நடிகர் விஷால்.. சஸ்பெண்ட் வாபஸ்?

படத் தயாரிப்பாளர் சங்கம் குறித்து தவறாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் நடிகர் விஷால். சென்னை உயர்நீதிமன்றத்தில் அதற்கான மனுவை அவர் தாக்கல் செய்தார்.

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: படத் தயாரிப்பாளர் சங்கம் பற்றி பத்திரிகை ஒன்றில் விஷால் தவறாக பேட்டியளித்ததால் அவர் படத் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு வருத்தம் தெரிவித்து இன்று நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகளை விமர்சித்து நடிகர் விஷால் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து, அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து கடந்த மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Actor Vishal apologizes for comments on producer council

படத் தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த செயலை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், தான் 2013ம் ஆண்டு முதல் படத் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், தன் மேல் வீண் பழி சுமத்தி விதிகளுக்கு எதிராக தான் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் விஷால் கூறியிருந்தார். மேலும் தன்னை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென அதில் அவர் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, தயாரிப்பாளர் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நடிகர் விஷால் தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்தால், அவருக்கு எதிரான சஸ்பெண்ட் நடவடிக்கையை தயாரிப்பாளர் சங்கம் கைவிடும் எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து, நடிகர் விஷால் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் படத் தயாரிப்பாளர் சங்கம் பற்றி கூறிய கருத்துக்கு விஷால் வருத்தம் தெரிவித்தார். இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணை வரும் 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் வருத்தம் தெரிவித்துள்ளதையடுத்து, விஷால் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து படத் தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூடி பரிசீலித்து முடிவு எடுக்கும் என்று படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

English summary
Actor Vishal apologizes for commenting on producer council in an interview in Chennai High Court today.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos