»   » நான் போட்டதெல்லாம் ஒரு சண்டையா... எல்லையில் ராணுவத்தினர் போடுவதே பெருமைக்குரிய சண்டை! - அஜீத்

நான் போட்டதெல்லாம் ஒரு சண்டையா... எல்லையில் ராணுவத்தினர் போடுவதே பெருமைக்குரிய சண்டை! - அஜீத்

Posted by:
Subscribe to Oneindia Tamil

எந்த மீடியாவைத் திருப்பினாலும் அஜீத்தின் பில்லா 2 செய்திகள்தான். படத்தின் விற்பனை, அஜீத்தின் சண்டைக் காட்சிகள், பிரமாண்ட ரிலீஸ் குறித்துதான் பலரும் பேசுகிறார்கள். இன்னொரு பக்கம் படத்தைப் பற்றி பேச மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே, முன்னணி இதழ்களுக்கு பேட்டிகள் தர ஆரம்பித்துள்ளார் அஜீத்.

இப்படத்தில் ஆபத்தான ஹெலிகாப்டர் சண்டை காட்சியொன்றில் அஜீத் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளது பற்றி நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். அஜீத்தின் இந்த த்ரில் பைட் அவரது ரசிகர்களுக்கு பெரும் ஷாக் தருவதாக இருந்தது. ஆனால் இந்த ரிஸ்க்கான பைட் குறித்து அஜீத் என்ன சொல்கிறார் தெரியுமா...?

"ஹெலிகாப்டர் சண்டை காட்சியில் நான் உயிரை பணயம் வைத்து சண்டை போட்டது பெரிதாக பேசப்படுகிறது. இதற்கான பெருமை மொத்த படக் குழுவினரையும் சேரும். இந்த சண்டைக்காட்சியை படமாக்கிய ஜெர்மன் ஸ்டன்ட் மாஸ்டர் ஸ்டிபன் ரிச்டருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

வாங்குகிற சம்பளத்துக்கு வேலை செய்கிறேன். எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன ராணுவ வீரர்களை விட பெரிதாக சாதித்து விடவில்லை. ராணுவ வீரர்கள் தான் நிஜ ஹீரோக்கள். அவர்கள் சண்டைதான் பெருமைக்குரியது.

என் படங்கள் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. படம் எப்படிப்பட்டது என்று ரசிகர்கள் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்.

நான் தேர்வு செய்யும் கதைகள் இயக்குனர், தயாரிப்பாளருக்கும் பிடித்து இருக்க வேண்டும். மூவரையும் கதை கவர்ந்தால்தான் படம் சிறப்பாக வரும். நல்ல கதை சொல்பவர்கள் எல்லோரும் சிறந்த இயக்குனர்கள் என்று கூறிவிட முடியாது. அது போல் கதை சொல்ல தெரியாதவர்கள் கூட சிறந்த இயக்குனர்களாக இருப்பார்கள் என் அனுபவம் மூலம் இதை உணர்ந்துள்ளேன்," என்றார்.

English summary
Actor Ajith says that his risky fight in Billa 2 is nothing compared with the nations army men in the borders of the country.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos