» 

பஞ்ச் டயலாக்கா.... ம்ஹூம்... நான் பேச மாட்டேன்!- கதாசிரியர்களுக்கு அஜீத் போட்ட கண்டிஷன்

Posted by:

சென்னை: என்னைப் புகழ்வது மாதிரி வசனங்களை யாரும் பேச வேண்டாம். பஞ்ச் வசனங்களோ காட்சிகளோ எனக்கும் வேண்டாம், என்று ஆரம்பம் படம் தொடங்கும் முன்பே கண்டிஷன் போட்டுவிட்டாராம் அஜீத்.

அஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்சி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆரம்பம்'. இப் படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படம் விரைவில் வெளியாக உள்ளதால், ஆரம்பம் படத்தின் புரமோஷன் பணிகள் சூடுபிடித்துள்ளன. இப்படத்தின் கதாசிரியர்களான சுபா படத்தில் பணியாற்றிய தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அவர்கள் கூறுகையில், "இயக்குனர் விஷ்ணுவர்தன் அஜீத்தை வைத்து ஒரு படத்தை எடுக்க போகிறோம் என கூறியபோது, அப்படம் அஜீத் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணமே கதையாக உருவெடுத்தது.

மூன்று மாதங்களுக்கு பிறகு கதைக் கருவை அவரிடம் பகிர்ந்துகொள்ள முதன்முதலாக அஜீத்தை சந்தித்தோம்.

எளிமை

அவரது எளிமை எங்களைக் கவர்ந்தது. ஒரு நட்சத்திரத்துக்குரிய எந்த பந்தாவும் இல்லாமல் இருந்தது வியப்பூட்டியது. அந்த வியப்பு அடங்கும் முன்னரே அவர் விடுத்த வேண்டுகோள் எங்களை மேலும் வியப்பூட்டியது.

நோ பஞ்ச்

படத்தில் தன்னை புகழும் காட்சிகளோ, வசனங்களோ, பஞ்ச் வசனங்களோ இருக்கக்கூடாது என்பதுதான். கதைக்குதான் நாயகனே தவிர நாயகனுக்கு கதை இல்லை என்பதை தெளிவாக வலியுறுத்தினார்.

தன்னம்பிக்கை

அவர் தன்னுடன் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் வகையில் காட்சி அமைப்பை அமைக்குமாறு இயக்குனரிடம் கூறியதை கேட்டபிறகுதான் அஜீத்துக்கு அவர் மீதுள்ள தன்னம்பிக்கையின் அர்த்தம் புரிந்தது. அந்த தன்னிம்பிக்கை அவருடன் பணியாற்றும் மற்றவர்களுக்கும் ஒட்டி கொண்டது என்றால் மிகை ஆகாது.

எடைக் குறைப்பு

படத்துக்காக அவர் எடையை குறைத்தால் நன்றாக இருக்கும் என்ற உடனே பல ஆபரேஷன் செய்துள்ள அவரது உடல் நிலையையும் மீறி ஒரு தினத்துக்கு 5 முதல் 6 மணி நேரம் வரை அயராமல் உடற்பயிற்சி செய்தார். அவரது இந்த கடமை உணர்ச்சிதான் அவரை இந்த உயரத்துக்கு கூட்டி சென்று இருக்கும் என தெளிவாக புரிந்தது.

ஆஜீத் மாதிரி யாருமில்லை

நாங்கள் பல நடிகர்களின் படங்களில் பணிபுரிந்து இருக்கிறோம், பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இதுவரை எந்த படத்துக்கும் ‘ஆரம்பம்' படத்தை பற்றிய ஆர்வம் போல் கண்டதில்லை. எல்லா தரப்பு ரசிகர்களும் இந்த படத்தை எதிர்பார்த்து கொண்டு இருப்பதை பார்க்கும்போதுதான் அவருடைய ரசிகர்கள் வட்டாரம் எந்த அளவுக்கு பரந்து உள்ளது என்பது புரிகிறது.

See next photo feature article

மல்டி ஸ்டார் படங்கள்

ஏராளமான பொருட்செலவு, விஷ்ணுவின் ஸ்டைலிஷ் இயக்கம் , யுவன் ஷங்கர் ராஜாவின் மெய் மறக்கும் இசை ஆகியவை அந்த எதிர்பார்ப்பை சந்திக்கும் என நம்பிக்கை எங்களுக்கு நிச்சயம் உண்டு. ஆர்யாவும் அஜீத்துக்கும் உள்ள பரஸ்பர மரியாதை, சிநேகம் ஆகியவை தமிழில் இனிமேல் பல நட்சத்திரங்கள் இணைந்தது நடிக்கும் காலம் வரும் என நம்பிக்கை தருகிறது. அதற்கு இந்த படம் தான் ஆரம்பம்," என்றனர்.

Read more about: arrambam, ajith, punch dialogues, ஆரம்பம், அஜீத், பஞ்ச் வசனங்கள்
English summary
Ajith told his writers before the shoot of Arrambam to avoid punch dialogues for him.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos