» 

ரசிகர்கள் யார் மனதையும் புண்படுத்தாதீர்கள்... தீபாவளி வாழ்த்துகள் - அஜீத்

Posted by:
 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க:
        ஷேர் செய்ய         ட்வீட் செய்ய         ஷேர் செய்ய கருத்துக்கள்     மெயில்

சென்னை: ரசிகர்கள் யார் மனதையும் புண்படுத்தக் கூடாது. தமிழக மக்களுக்கு என் தீபாவளி நல்வாழ்த்துகள் என அறிக்கை வெளியிட்டுள்ளார் அஜீத்.

தீபாவளியை முன்னிட்டு நேற்று அஜீத்தின் ஆரம்பம் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Ajith's Diwali wishes

இந்நிலையில் சில இடங்களில் ரசிகர்கள் ஆர்வத்தில் அரங்குகளை சேதப்படுத்தி வருகின்றனர். இதனை அடுத்து 'வீரம்' படப்பிடிப்பில் இருக்கும் அஜீத் வெளியிட்டுள்ள அறிக்கை:

திரைப்படம் என்பது அனைவரும் பார்த்து மகிழவே எடுக்கப்பட்டது.எனது ரசிகர்களின் அன்பை நான் அறிவேன். இந்நிலையில் தமிழ்நாட்டில் சில திரையரங்கில் ரசிகர்கள் சேதப்படுத்துவதாக வந்த செய்தி என்னை கவலை அடைய செய்துள்ளது. நாம் யார் மனதையும் புண்படுத்தவோ, இல்லை அவர்களது தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தவோ கூடாது.

தீபாவளியை உங்கள் குடும்பத்துடன் சந்தோஷத்துடனும்,பாதுகாப்புடனும் கொண்டாடுங்கள்.

தமிழ் மக்களுக்கு என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள்," என்று கூறியுள்ளார்.

Read more about: ajith, diwali, wishes, arrambam, அஜீத், ஆரம்பம், தீபாவளி வாழ்த்து
English summary
Actor Ajith conveyed his Diwali wises to Tamils and advised his fans not to hurt others.
Please Wait while comments are loading...
Your Fashion Voice

Tamil Photos

Go to : More Photos