»   »  'ராஜா ராணி'க்கு மக்கள் தந்த அங்கீகாரம் மகிழ்ச்சி தருகிறது... வாயெல்லாம் பல்லாக ஆர்யா...!

'ராஜா ராணி'க்கு மக்கள் தந்த அங்கீகாரம் மகிழ்ச்சி தருகிறது... வாயெல்லாம் பல்லாக ஆர்யா...!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜா ராணி படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஆர்யா.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் உடன் ஏ.ஆர். முருகதாஸ் இணைந்து தயாரித்த படம் 'ராஜா ராணி', ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நசிம் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் அட்லி இயக்கியுள்ளார்.

கடந்த வாரம் வெளியான இப்படம், முதல் வார இறுதியில் 12.2 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வருடம் வெளிவந்த படங்களில் நான்காவது பெரிய வசூல் இப்படம் இதுதான் எனக் கூறப்படுகிறது. மேலும்,ஆர்யாவின் நடிப்பில் வந்த படங்களில் அதிக வசூலைத் தந்தது என்ற பெருமையும் இப்படத்திற்கு சேர்ந்துள்ளதாம்.

இதனால் மிகவும் சந்தோஷமாக இருக்கும் ஆர்யா ராஜாராணி படத்தின் வெற்றி குறித்து கூறியதாவது...

மிகப்பெரிய வெற்றி....

‘முதல்நாள் ஷூட்டிங்கின் போதே எங்கள் படக்குழுவினர் அனைவருக்கும் இப்படம் மிகப் பெரிய வெற்றியைச் சந்திக்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

திரைவாழ்வில் ஒரு மைல்கல்....

ஆனால், என்னுடைய திரையுலக வாழ்வில் இப்படம் இவ்வளவு பெரிய வெற்றியைத் தரும் என நான் எண்ணிப் பார்க்கவே இல்லை.

மக்கள் ஆதரவு....

இப்படத்திற்கு மக்களிடையே கிடைத்துள்ள ஆதரவு குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்.

குடும்பப்படம்....

வார இறுதி நாட்களில் மட்டுமில்லாது வார நாட்களிலும் குடும்பம் சகிதமாக இப்படத்தைக் காண வரும் கூட்டத்தை பார்க்கையில் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

பாசிட்டிவ் எண்ணங்கள்....

நாங்கள் அனைவரும் எப்போதுமே இப்படம் நிச்சயமாக வெற்றியடையும் என பாசிட்டிவ்வாக எண்ணிக் கொண்டே செயல் பட்டதே இப்படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என நான் கருதுகிறேன்.

காலை வாராத ஸ்கிரிப்ட்....

படத்தின் ஸ்கிரிப்டை நாங்கள் நம்பினோம். அது நிச்சயமாக எங்களைக் கீழே தள்ளி விடாது என்பதில் நாங்கள் மிக உறுதியாக இருந்தோம்' எனத் தெரிவித்துள்ளார்.

வெற்றி நாயகன்....

விரைவில் ஆர்யா நடிப்பில் அஜீத்துடன் ஆரம்பம் மற்றும் செல்வராகவனின் இரண்டாம் உலகம் வெளிவர இருப்பதும் கூட ஆர்யாவின் மகிழ்ச்சிக்கு காரணம் எனச் சொல்லப் படுகிறது.

English summary
Directed by debutant Atlee, Raja Rani is the story of a married couple, reeling from recent breakups and falling in love again. It also features Nayanthara, Jai, Nazriya Nizam and Santhanam. Meanwhile, Arya is awaiting release of two big-ticket Tamil films - Arrambam and Irandam Ulagam.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos