twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒவ்வொரு பலாத்கார குற்றவாளியின் ஆண்மையை அகற்ற வேண்டும்: நடிகர் அக்ஷய் குமார்

    By Siva
    |

    மும்பை: பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளின் ஆண்மை தன்மையை நீக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் 25 வயது பெண்ணை உபேர் டாக்சி டிரைவர் ஷிவ் குமார் யாதவ் தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவத்தை கண்டித்து டெல்லியில் பல்வேறு போராட்டங்கள் நடந்தது. பாலிவுட் பிரபலங்கள் பலர் இந்த சம்பவத்தை கண்டித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் இது குறித்து டெல்லியில் வளர்ந்த பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    மகள்

    மகள்

    எனக்கும் ஒரு மகள் உள்ளார். என்ன தான் அவரை பாதுகாத்தாலும் அவரின் பாதுகாப்பு பற்றி அச்சம் இருக்கத் தான் செய்கிறது. ஒரு தந்தையாக என் மகளை பாதுகாக்க வேண்டியது என் கடமை. அதே நம் அரசாங்கமும் பெண்களை பாதுகாக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். பயமில்லாமல் வெளியே வர முடியவில்லை என்றால் எதற்காக நாம் வரி செலுத்துகிறோம்?

    தண்டனை

    தண்டனை

    பலாத்காரம் செய்யும் ஆண்களை தண்டிக்க யோசிக்கவே கூடாது. பாலியல் பலாத்கார குற்றவாளிகளின் ஆண்மையை அகற்ற வேண்டும். மனிதத்தன்மை இல்லாமல் நடப்பவர்களுக்கு கடும் தண்டனை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.

    தற்காப்பு

    தற்காப்பு

    தற்காப்பு கலை பெண்களை பாதுகாக்கும் என்றாலும் அதுவே தீர்வாகிவிடாது. எனக்கு தற்காப்பு கலை தெரியும். நான் பார்க்கும் இடத்தில் உள்ள பெண்களை மட்டுமே என்னால் காப்பாற்ற முடியும். தூரத்தில் உள்ள பெண்களை யார் காப்பாற்றுவது? வெளியே செல்லும் பெண்கள் பத்திரமாக வீடு திரும்புவதில் உத்தரவாதம் இல்லை என்பதை நினைக்கையில் என் இதயம் நொறுங்குகிறது.

    டெல்லி

    டெல்லி

    பலாத்காரங்கள் நம் நாட்டில் நடக்கிறது என்பதை நினைக்கையில் வருத்தமாக உள்ளது. நாட்டிலேயே டெல்லியில் உள்ள பெண்கள் தான் ஆபத்தில் உள்ளனர் என்பதை நினைக்கையில் வெட்கமாக உள்ளது. நான் வளர்ந்த ஊரில் நடந்துள்ள சம்பவத்தை நினைத்து வேதனைப்படுகிறேன். வேலைக்கு செல்லும் வழியில் பலாத்காரம் செய்யப்படுவோமோ என்ற பயம் ஆண்களுக்கு ஏற்பட்டால் தான் இது போன்ற சம்பவங்கள் நடக்காது.

    ஆண்கள்

    ஆண்கள்

    பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிவிடலாம் என்று ஆண்கள் நினைப்பதற்கு காரணம் அவர்களுக்கு பயம் இல்லை. டெல்லி டாக்சி டிரைவர் ஏற்கனவே பலாத்கார வழக்கில் சிக்கியுள்ளார். அவர் மீண்டும் தெருவில் நடக்க வேண்டும் என்று கூட நினைத்துப் பார்க்கக் கூடாது என்றார் அக்ஷய்.

    English summary
    Bollywood actor Akshay Kumar told that every rapists should be castrated.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X