»   »  காந்தி வக்கீல் பட்டத்தைத் திருப்பிக் கொடுத்தாரா...? கமல் கேள்வி

காந்தி வக்கீல் பட்டத்தைத் திருப்பிக் கொடுத்தாரா...? கமல் கேள்வி

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ளையனை எதிர்த்து நின்ற காந்தி வக்கீல் பட்டத்தை திருப்பிக் கொடுக்கவில்லையே, நான் விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பதால், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா? என நடிகர் கமல் தனது பிறந்தநாள் விழாவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் கமல் நேற்று தனது 61வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதையொட்டி, சென்னை சேப்பாக்கம் அண்ணா கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்போது நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம் நடத்தியவர்களுக்கு கேடயங்கள், பள்ளிக்கட்டிட நிதி போன்றவற்றை அவர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து விழா மேடையில் பேசிய கமல்,

சந்தேகம்...

எனது சகிப்புத்தன்மை பற்றி சந்தேகப்படுகிறார்கள். அவதூறு பேசுபவர்களுக்கு பலமடங்கு எங்களால் பதிலடி கொடுக்கமுடியும். அதை செய்யவேண்டாம் என்று கட்டுப்பாட்டுடன் இருக்கிறோம்.

இது தவறா...

மகாவீரம் என்பது அகிம்சை. விருதுகளை திருப்பிக்கொடுக்கமாட்டேன் என்றேன். அதை தவறு என்கிறார்கள்.

காந்தி நிலை...

வெள்ளையனை எதிர்த்து நின்ற காந்தி வக்கீல் பட்டத்தை திருப்பிக்கொடுக்கவில்லை. எனக்கு அரசு விருது கொடுக்கவில்லை.

அவமதிப்பது...

12 அறிஞர்கள் கொடுத்தார்கள். விருதுகளை திருப்பிக்கொடுப்பது அவர்களை அவமதிப்பது போன்றது ஆகும். எங்கள் சுதந்திரம் பறிபோகும் நிலை வந்தால் குரல் கொடுப்பேன்.

சுத்தம் செய்ய...

சமுதாய தெருவில் அசுத்தங்கள் கொட்டிக்கிடக்கிறது. அவற்றை சுத்தம் செய்ய எந்த கட்சி அழைத்தாலும் ஓடி வருவேன்.

உலக பக்தியை நோக்கி...

பாகிஸ்தான் பிரிந்தபோதே நமது சகிப்புத்தன்மை போய்விட்டது. மீண்டும் அதுபோன்ற ஒரு நிகழ்வு நடக்கக்கூடாது. தேச பக்தியை தாண்டி உலக பக்தி நோக்கி நாம் போய்க்கொண்டிருக்கிறோம்.

நேர்மை மீது சந்தேகம்...

யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று 2 ஆயிரம் ஆண்டில் தமிழ் புலவன் சொன்னதை உலகத்துக்கு காட்டவேண்டாமா?. நான் கோபமாக பேசுவதாக கருதலாம். என் நேர்மையை சந்தேகித்ததால்தான் இதையெல்லாம் சொன்னேன்.

அக்னி பரீட்சை...

எனக்கு அக்னி பரீட்சை வைக்கமுடியாது. அதை சீதைக்கு வைத்துக்கொள்ளுங்கள்.

தீபாவளி கொண்டாடுவதில்லை...

தீபாவளி பண்டிகையை நான் கொண்டாடுவது இல்லை. என் உறவுக்காரனை, அசுரனை கொன்றதற்காக அந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அவனும் மனிதன்தான்' என இவ்வாறு கமல் பேசினார்.

English summary
Coming out strongly against those returning their awards over the "intolerance" row, actor Kamal Haasan today wondered if such acts would achieve anything as he invoked Mahatma Gandhi saying even he did not give back his Law degree to protest against the Britishers.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos