»   »  என்னை நோக்கி பாயும் தோட்டா: தனுஷுக்கு வில்லனாகும் கவுதம் மேனன்?

என்னை நோக்கி பாயும் தோட்டா: தனுஷுக்கு வில்லனாகும் கவுதம் மேனன்?

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் தனுஷுக்கு வில்லனாக கவுதம் மேனன் நடிக்கப் போவதாக கூறுகின்றனர்.

தனுஷ்- கவுதம் மேனன் கூட்டணி முதன்முறையாக இணைந்திருக்கும் படம் 'என்னை நோக்கி பாயும் தோட்டா'. இதில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார்.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், தனுஷ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

Gautham Menon  Play a Baddie in Yenai Nokki Paayum Thotta

தனுஷ் 2 வேடங்களில் நடித்து வரும் இப்படத்தின் முதல் கெட்டப்பை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது.இந்நிலையில் தனுஷுக்கு வில்லனாக இப்படத்தில் இயக்குநர் கவுதம் மேனனே நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

தனுஷுக்கு வில்லனாக நடிக்க பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் யாரும் எதிர்பார்த்தது போல அமையவில்லை என்றும், அதனால் கவுதம் மேனனே நடிக்கப் போவதாகவும் கூறுகின்றனர்.

இதுகுறித்து படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக எஸ்.ஜே.சூர்யாவை இப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Now, a report has it that, Gautham Vasudev Menon is playing the crucial role of the baddie. Is he planning to surprise his audiences by playing a fully fledged role this time around? Official confirmation on the same is awaited.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos