»   »  தமிழ் தெரிஞ்ச நாயகிகளால்தான் சிறப்பாக நடிக்க முடியும்!- விக்ரம் பிரபு #Veerasivaji #Shamli

தமிழ் தெரிஞ்ச நாயகிகளால்தான் சிறப்பாக நடிக்க முடியும்!- விக்ரம் பிரபு #Veerasivaji #Shamli

Posted by:
Subscribe to Oneindia Tamil

தமிழ்ப் படங்களில் நடிக்கும் நாயகிகளுக்கு தமிழ் தெரிந்தால்தான் நன்றாக நடிக்க முடியும் என்று நடிகர் விக்ரம் பிரபு கூறினார்.

நந்தகோபால் தயாரிப்பில் விக்ரம் பிரபு-ஷாம்லி ஜோடியாக நடித்துள்ள படம், 'வீர சிவாஜி.' இந்த படத்தை கணேஷ் விநாயக் இயக்கியுள்ளார்.


வீர சிவாஜி படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இதில் கதாநாயகன் விக்ரம் பிரபு, தயாரிப்பாளர் நந்தகோபால், இசையமைப்பாளர் இமான், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


பேட்டி

இசை வெளியீட்டு விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விக்ரம் பிரபு, "வீர சிவாஜி ஜனரஞ்சகமான படமாக தயாராகி உள்ளது. ஊரையே கொள்ளையடித்து வாழும் ஒருவனிடம் இருந்து மக்களை காப்பாற்ற போராடி வெற்றி பெறும் வீரமான இளைஞனை பற்றிய கதை.


ஜாலியான கதை

இதில் நான் டாக்சி டிரைவராக வருகிறேன். கள்ள நோட்டு விஷயங்கள் மற்றும் அன்றாடம் ஒரு டிரைவரை சுற்றி நடக்கும் சம்பவங்கள் படத்தில் இருக்கும். அதிரடி, நகைச்சுவையுடன் ஜாலியான படமாக வந்துள்ளது.


ஷாம்லி

காட்சிகள் விறுவிறுப்பாக நகரும். இமான் நல்ல பாடல்களை கொடுத்து இருக்கிறார். ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஷாம்லி கதாநாயகியாக நடித்துள்ளார். நாயகியாக அவருக்கு இது தமிழில் முக்கியமான படம்.


தமிழ் பேச...

தமிழ் பேச தெரிந்த கதாநாயகிகளுடன் நடிப்பது வசதியானது. தமிழில் கொடுக்கும் வசனத்தை புரிந்து கொண்டு பேசுபவர்களாக கதாநாயகிகள் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நடிகைகளால்தான் கதையை உள்வாங்கி சிறப்பாக நடிக்க முடியும்.


நடிப்பில் கவனமிருக்காது

தமிழ் பேச தெரியாத நடிகைகள் எழுதி கொடுத்த வசனத்தை எப்படி பேசுவது என்பதில்தான் கவனமாக இருப்பார்கள். சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதில் அவர்களுக்கு சிந்தனை இருக்காது.


அனைத்து வகைப் படங்களிலும்...

ஷாம்லி தமிழ் பேசக்கூடியவர். குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகியாகி இருக்கிறார். எனவே அவர் சிறப்பாக நடித்து இருக்கிறார். அதிரடி படங்கள் மட்டுமன்றி எல்லா கதையம்சம் உள்ள படங்களிலும் நடிப்பேன்," என்றார்.


English summary
Actor Vikram Prabhu says that heroines must learn Tamil to expose their expression well.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos