twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் ரித்திக் ரோஷனுக்கும் ட்விட்டருக்கும் ராசியே இல்லை!

    By Siva
    |

    மும்பை: மணிப்பூரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் பலியானது பற்றி தவறாக ட்வீட் போட்டு மக்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன்.

    மணிப்பூர் மாநிலம் சாந்தல் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் பலியாகினர், 16 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் இந்த சம்பவம் குறித்து தவறாக ட்வீட் போட்டு பலரின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.

    மணிப்பூர் சம்பவம் பற்றி ரித்திக்கின் ட்வீட்டும், மக்களின் கிண்டல் ட்வீட்களும்,

    ரித்திக்

    மணிப்பூர் பழங்குடியினத்தவர்களால் கொல்லப்பட்ட 20 ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்..சல்யூட் என்று ரித்திக் ட்வீட் செய்துள்ளார். தீவிரவாதிகள் என்பதற்கு பதிலாக அவர் பழங்குடியினத்தவர்கள் என்று தவறாக தெரிவித்துள்ளார்.

    தீவிரவாதிகள்

    மணிப்பூர் பழங்குடியினத்தவர்களால் அல்ல தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். நடிகர்கள் எல்லாம் மூளையில்லாத அழகான நபர்கள் என்று மக்கள் நினைப்பதில் தவறே இல்லை என மருத்துவ மாணவி சந்தோயிஷா பிசேசார் ட்வீட் செய்துள்ளார்.

    பழங்குடியினத்தவர்கள்

    #HrithikHurtsManipurTribals நான் மணிப்பூரைச் சேர்ந்த பழங்குடியினத்தவன். ஆனால் நான் தீவிரவாதி அல்ல. உங்களுக்காக வருந்துகிறேன் ரித்திக் என ரேமன்ட் ரோனமாய் என்பவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    அவமதிப்பு

    மணிப்பூரைச் சேர்ந்த பழங்குடியினத்தவர்கள்? இப்படி தான் ரித்திக் மணிப்பூர் மக்களை அவமதித்தாரா? என பாஸ்கர் என்பவர் ட்வீட் செய்துள்ளார்.

    தவறு

    ட்விட்டரில் ஆளாளுக்கு தன்னை கிண்டல் செய்வதை அறிந்த ரித்திக் தனது தவறை திருத்தி மீண்டும் ட்வீட் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, திருத்தம்- அடையாளம் தெரியாத மணிப்பூர் பழங்குடியினத்து தீவிரவாத அமைப்புகளால்.. என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Bollywood hunk Hrithik Roshan has become the butt of jokes in twitter after his tweet about the militant attack in Manipur.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X