»   »  தலைக்கனமும் இல்லை, யார் காலை வாரும் புத்தியும் இல்லை: விஜய் சேதுபதி

தலைக்கனமும் இல்லை, யார் காலை வாரும் புத்தியும் இல்லை: விஜய் சேதுபதி

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெற்றியை பார்த்து தலைக்கனம் கொள்பவன் நான் அல்ல. ஒருவரின் காலை வாரிவிட்டு முன்னேறும் புத்தி எனக்கு கிடையாது. சக நடிகர்களின் படங்களும் வெற்றியடைவதை பார்த்து மகிழ்பவன் நான் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தர்மதுரை. படம் வரும் 19ம் தேதி ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் படம் குறித்து விஜய் சேதுபதி கூறுகையில்,


தர்மதுரை

தர்மதுரை

தர்மதுரை படம் ஒரு காதல், இமோஷன் கலந்த ரோலர் கோஸ்டராக இருக்கும். ஒரு மனிதன் தனது வாழ்வின் மூன்று வித்தியாசமான காலகட்டங்களில் மூன்று பெண்களை காதலிப்பது தான் கதை.


தாய்ப் பாசம்

தாய்ப் பாசம்

படத்தில் காதல் மட்டும் இல்லைங்க தாய்ப்பாசமும் உள்ளது. தாய்க்கும், மகனுக்குமான பாசத்தை விளக்கும் படம். மொத்தத்தில் தர்மதுரை குடும்ப ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதில் சந்தேம் இல்லை.


வெற்றி

வெற்றி

வெற்றியை பார்த்து தலைக்கனம் கொள்பவன் நான் அல்ல. ஒருவரின் காலை வாரிவிட்டு முன்னேறும் புத்தி எனக்கு கிடையாது. சக நடிகர்களின் படங்களும் வெற்றியடைவதை பார்த்து மகிழ்பவன் நான் என்றார் விஜய் சேதுபதி.


ஆட்டோகிராப்

ஆட்டோகிராப்

தர்மதுரை படத்தின் கதையை கேட்டால் சேரனின் ஆட்டோகிராப் அல்லவா நினைவுக்கு வருகிறது. சரி ஏதாவது வித்தியாசமாக சொல்லியிருப்பார்கள். படம் வெளியாகட்டும் அதுவரை காத்திருப்போம்.English summary
Vijay Sethupathi said, "I have zero ego when it comes to success. I never had this attitude of pulling down others and climbing to the top."
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos