»   »  நான் ஒரு 'ஃபெயிலியர்': நடிப்புக்கு முழுக்கு போட்ட நடிகர் கார்த்திக் குமார்

நான் ஒரு 'ஃபெயிலியர்': நடிப்புக்கு முழுக்கு போட்ட நடிகர் கார்த்திக் குமார்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பசங்க 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கார்த்திக் குமார் நடிப்புக்கு முழுக்கு போடுவதாக அறிவித்துள்ளார்.

மணிரத்னத்தின் அலைபாயுதே படம் மூலம் கோலிவுட் வந்தவர் கார்த்திக் குமார். ஷாலினியை பெண் பார்ப்பாரே அவரே தான். யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவின் முறைமாப்பிள்ளையாக நடித்தவர் கார்த்திக்.

பசங்க 2 படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் நடிப்புக்கு முழுக்கு போடுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,

நிறுத்திக்கிறேன்

19 படங்கள் இறுதியில் நான் நிறுத்திக் கொள்கிறேன். இனியும் ஒரு நடிகனாக சினிமாவில் இருக்க மாட்டேன். நடிப்புக்கு முழுக்கு போட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

படம்

எனது 19வது படத்தில் நடிக்க உள்ளேன். அழகான காமெடி டிராமா. சினிமா பின்னணி இல்லாமல் இங்கு வந்தேன். அப்படி இருந்தும் 19 படங்கள் பண்ணியது வியக்க வைத்துள்ளது. ஹீரோ, காமெடி நடிகர், இரண்டாவது ஹீரோ, வில்லன், கவுரவத் தோற்றம், துணை நடிகர் என பல கதாபாத்திரங்களில் நடித்துவிட்டேன்.

வேலை

வேலை தேடுவதில் நான் வெற்றி அடைந்தேன். ஆனால் நான் எனக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை. நான் ஹீரோவாக நடித்த படத்தில் என்னிடம் இருந்து நிறைய எதிபார்க்கப்பட்டது. அடுத்த அரவிந்த்சாமி, மாதவன் என்ற அளவுக்கு எதிர்பார்க்கப்பட்டது.

கதாபாத்திரங்கள்

என்னை தேடி வந்த கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்புக் கொண்டேன். முடியாது என்று சொல்லியிருக்கலாம். அடுத்த பட வாய்ப்பு கிடைக்காமல் கூட இருந்துள்ளேன்.

நம்பிக்கை

நல்ல குழுவினருடன் பணியாற்றியுள்ளேன் என நிம்மதி உள்ளது. இந்த சினிமா பயணத்தில் நான் நண்பர்கள் என நினைத்தவர்கள், நம்பியவர்கள் என்னை கைவிட்டனர். என் மீது எனக்கே நம்பிக்கை இல்லை எனும்போது அடுத்தவர்களை எப்படி குறை சொல்ல முடியும்.

இன்று

இன்று நான் நிறுத்திக் கொள்கிறேன். நான் நம்பிக்கையில் ஓடிக் கொண்டிருந்தேன். நல்லது நடக்கும் என ஓடினேன். ஆனால் அது தவறு. தவறான பாதையில் ஓடுவதை விட நிறுத்திக் கொள்வது நல்லது.

காயம்

நான் இனி நடிகன் அல்ல. நீண்ட காலமாக என்னை நானே காயப்படுத்திக் கொண்டேன். மேலும் பிறர் என்னை காயப்படுத்தவும் அனுமதித்துவிட்டேன். நான் ஒரு தோல்வி அடைந்த நடிகன். நான் என்னாலேயே தோல்வி அடைந்துள்ளேன். என்னை நம்ப தவறிவிட்டேன்.

English summary
Actor Karthik Kumar has called it quits after he called himself as a failure.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos