»   »  ரஜினி - கமல் முன்னால் நான் சின்ன பையங்க!- சூர்யா

ரஜினி - கமல் முன்னால் நான் சின்ன பையங்க!- சூர்யா

Posted by:
Subscribe to Oneindia Tamil

ரஜினி, கமல் ஹாஸன் முன்னால் நான் சின்னப் பையன் என்று நடிகர் சூர்யா கூறினார்.

சிங்கம் 3 படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது, இன்றைய தேதிக்கு தமிழ் சினிமா வியாபாரத்தைப் பொறுத்தவரை, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்து நடிகர் சூர்யாதான். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் அந்த அளவு சூர்யா படங்களுக்கு பிஸினஸ் உள்ளது என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருந்தார்.

I'm a small boy before Rajini and Kamal

இதுகுறித்து சூர்யாவிடம், 'ரஜினிக்கு அடுத்து கமல் ஹாஸன் என்று கூறி வந்தனர். ஆனால் உங்கள் தயாரிப்பாளரோ, நீங்கள்தான் ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருப்பதாகக் கூறுகிறார். இதை ஏற்றுக் கொள்கிறீர்களா?' என்று சூர்யாவிடம் கேட்கப்பட்டது.

[Read This: தமிழ் சினிமாவில் இப்போது ரஜினிக்கு அடுத்தது சூர்யாதான்!- சொல்கிறார் ஞானவேல்ராஜா]

அதற்கு பதிலளித்த சூர்யா, "அவர்கள் ஏதோ ஆர்வத்தில் கூறுகிறார்கள். சி3 படத்தின் வர்த்தகத்தை வைத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் ரஜினி சார், கமல் சாருடன் ஒப்பிடும் அளவுக்கு நான் இல்லை. நான் சின்னப் பையன்," என்றார்.

English summary
Actor Surya says that he is a small boy compared to Rajini and Kamal.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos