twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சகிப்பின்மை பற்றி நான் கூறியதை திரித்துவிட்டார்கள், நான் ஏன் மன்னிப்பு கேட்கணும்?: ஷாருக்கான்

    By Siva
    |

    மும்பை: சகிப்பின்மை பற்றி நான் தெரிவித்த கருத்தை திரித்துவிட்டார்கள். மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நான் எதையும் கூறவில்லை என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

    நாட்டில் சகிப்புத்தன்மை இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இது கவலை அளிக்கும் விஷயம் என பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கடந்த மாதம் தெரிவித்தார். இதையடுத்து பாஜகவினர் அவரை பாகிஸ்தான் ஏஜெண்ட் என்று விமர்சித்ததுடன், அவரை பாகிஸ்தானுக்கு செல்லுமாறும் கூறினர்.

    இந்நிலையில் இது குறித்து ஷாருக்கான் தற்போது கூறியிருப்பதாவது,

    திரித்து

    திரித்து

    நான் கருத்து தெரிவிக்கும் பலவற்றை திரித்து கூறிவிடுகிறார்கள். நான் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு எதையும் கூறவில்லை. விளக்கம் கொடுக்கும் நிலையில் நான் இல்லை.

    மக்கள்

    மக்கள்

    இந்த நாட்டு மக்களுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். அவர்களுக்கு நான் கூறியது புரியவில்லை என்று நினைக்கிறேன். 25 ஆண்டுகளாக மக்கள் என் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர். அவர்களின் அன்பால் தான் நான் இன்று இந்த நிலையில் உள்ளேன்.

    படம்

    படம்

    தியேட்டர்களில் என் படம் நிறுத்தப்பட்டுள்ளது என்று வாட்ஸ்ஆப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் எனக்கு மெசேஜ் வந்ததை பார்த்து மிகவும் வருத்தப்பட்டேன். மகிழ்ச்சியை அளிக்கும் படத்தை ஏன் நிறுத்த வேண்டும்?

    அன்பு

    அன்பு

    கடந்த 20 ஆண்டுகளில் அனைத்து மாநில, மத மக்கள் என் பணியை மதிப்பிட்டுள்ளனர். சில நேரம் வெற்றி பெற்றுள்ளேன், சில நேரம் தோல்வி அடைந்துள்ளேன். அனைத்து மத மக்களும் என் மீது அன்பு வைத்துள்ளனர்.

    நிர்பயா

    நிர்பயா

    நிர்பயா வழக்கு குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. தில்வாலே படம் குறித்து செய்தியாளர்கள் மேலும் தகவல் கிடைக்குமா என்று எதிர்பார்க்கையில் நான் நிர்பயா வழக்கு பற்றி பேச மாட்டேன்.

    English summary
    Over a month after lending voice to the intolerance debate by alleging that there was "extreme intolerance" in the country, actor Shah Rukh Khan on Tuesday said his comments were "misconstrued" and asserted that he did not say anything for which he should apologise.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X