»   »  "எல்லாம் என் தலையெழுத்து"... "விக்"கை கழட்டி தலையிலேயே அடித்துக் கொள்ளும் பவர்ஸ்டார்!

"எல்லாம் என் தலையெழுத்து"... "விக்"கை கழட்டி தலையிலேயே அடித்துக் கொள்ளும் பவர்ஸ்டார்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிலர் பேசுவதைக் கேட்டால் சிரிப்பு வரும், சிலரைப் பார்த்தாலே சிரிப்பு சிரிப்பாக வரும். ஆனால், ரஜினி பட டயலாக் போல, சிலரது பெயரைக் கேட்டாலே சிரிப்பு குபீரென்று கொப்பளித்துக் கொண்டு வரும். அந்த மூன்றாவது வகையைச் சேர்ந்தவர் தான் பவர்ஸ்டார் சீனிவாசன்.

தனது பேச்சு மற்றும் நடவடிக்கைகள் மூலம் மற்றவர்களைச் சிரிக்க வைக்கும் பவர்ஸ்டாருக்கும் ‘உள்ளே அழுகிறேன், வெளியில் சிரிக்கிறேன்' ரேஞ்சுக்கு பிரச்சினைகள் பல. அதெல்லாம் அவர் சொல்லித்தான் மற்றவர்களுக்கேத் தெரிய வருகிறது.

எதையும் வெளியில் காட்டி கொள்ளாது, தனது டிரேட் மார்க் புன்னகையால் மற்றவர்களை சிரிக்க வைப்பதே தனது ‘தலை'யாய கடமையாக செயல்பட்டு வருகிறார் இந்த வெள்ளை ரோஜா!.

இந்த நிலையில், ஷங்கரின் இயக்கத்தில், விக்ரம் படத்தில் இணைந்து நடித்து விட்ட மகிழ்ச்சியில் உள்ள பவர்ஸ்டார், தி இந்து நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-

விமர்சனங்கள்...

நான் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டேன். என்னை கைது செய்து கொண்டுபோனபோதும் நான் ஷூட்டிங்குக்கு போவது போல்தான் போனேன். இந்த கட்டத்தில் இப்படி நடக்க வேண்டும் என்பது கடவுளின் அமைப்பு என்றுதான் எடுத்துக்கொள்வேன்.

ராமரும் நானும்!

ராமரே 14 வருடங்கள் காட்டில் இருந்தார், அது அவருடைய தலை எழுத்து. அதே மாதிரி நானும் சிறைக்குப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டேன்.

 

 

ஷங்கர் எழுதிய வசனம்...

‘ஐ' படத்தில் முதலில் எனக்கு காரில் இருந்து இறங்கி வரும் காட்சி மட்டும்தான் இருந்தது. அதன் பிறகு உடற்பயிற்சி செய்யும் காட்சியையும் சேர்த்தார்கள். அதில் "2016-ல் நான்தாண்டா சி.எம்" என்ற வசனத்தை ஷங்கர் எனக்காகவே எழுதினார். "இந்த வசனத்தை உங்களுக்காகவே எழுதியிருக்கிறேன்" என்றார். எனக்காக அவர் வசனம் எழுதியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

நேரம் சரியில்லை பாஸ்...

இப்போது எனக்கு நேரம் சரியில்லை. அதனால் ஏப்ரல் வரை தள்ளிப் போட்டிருக்கிறேன். ‘தேசிய நெடுஞ்சாலை' என்ற படத்தை மீண்டும் தொடங்கலாம் என்றிருக்கிறேன்.

என்னைக் கழற்றி விட்ட சந்தானம்...

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தோடு சந்தானம் என்னை கழட்டி விட்டுவிட்டார். என்னுடைய வளர்ச்சி அவருக்கு பிடிக்கவில்லை. எல்லா இடத்திலும் என்னை டம்மியாக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

போஸ்டர் கூட கூடாது...

‘யா யா' என்று ஒரு படத்தில் சேர்ந்து நடித்தோம். அதில் அவர் என்னுடன் நெருக்கமாக நடிக்கவில்லை. போஸ்டரில் என்னுடைய புகைப்படத்தைப் போடக்கூடாது என்று தயாரிப்பாளரிடம் கூறியிருக்கிறார்.

சந்தானம் நல்லவர் தான்...

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தில்கூட ஒரு காட்சிதான் கொடுத்தார். அப்போது கூட என்னை சந்திக்க மறுத்துவிட்டார். சந்தானம் நல்லவர்தான், ஆனால் அவருடன் இருப்பவர்கள்தான் இதற்கெல்லாம் காரணம். ‘பவருக்கு சப்போர்ட் பண்ணாதே, அவர் வளர்ந்துவிடுவார்' என்று தடுக்கிறார்கள்.

ஒரே போட்டி ரஜினி தான்...

எனக்கு போட்டி என்றால் அது ரஜினிதான். ரஜினி ஏன் போட்டி என்றால் அவர் ஆரம்பத்தில் இருந்து கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருக்கிறார். அவரைப்போல் நானும் வர வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.

எதிரிகள் இல்லை...

எனக்கு எதிரி என்று யாருமே கிடையாது. சினிமாவில் நான் வளரக் கூடாது என்று நினைக்கிற முதல் ஆள் சந்தானம்.

லிங்கா தோல்வி...

பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்தால் பெரிய நடிகராகி விடலாம் என்பது பொய். எப்போதுமே கதைதான் ஹீரோ. ரஜினி நடித்த ‘லிங்கா' படமே தோல்வியடைந்துவிட்டது. ஆகையால் எப்போதுமே கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கவே விரும்புகிறேன்.

லத்திகா ரகசியம்...

‘லத்திகா' படத்தை 250 நாட்கள் ஓட்டியது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. தமிழ் திரையுலகில் என் பெயர் நிற்கவேண்டும் என்பதற்காகத்தான். இப்படத்தை பார்க்க வரும் ரசிகர்களுக்கு குவாட்டர், பிரியாணி எல்லாம் வாங்கிக் கொடுத்தேன்.

தியேட்டரையே வாங்கியிருக்கலாம்...

எனது படம் ஒடிய திரையரங்கில் வெள்ளை அடித்துக் கொடுத்தது, சீட் மாற்றியது என்று பல வேலைகள் செய்தேன். அதற்காக நான் செய்த செலவுக்கு ஒரு தியேட்டரையே விலைக்கு வாங்கியிருக்கலாம்.

இவ்வாறு அந்தப் பேட்டியில் பவர்ஸ்டார் தெரிவித்துள்ளார்.

 

English summary
The actor Pwerstar Srinivasan has said that he was arrested and sent to jail, because of his fate.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos