»   »  இஞ்சி இடுப்பழகி: சிறப்புத் தோற்றத்தில் ஜீவா.. நண்பன் ஆர்யாவுக்காக

இஞ்சி இடுப்பழகி: சிறப்புத் தோற்றத்தில் ஜீவா.. நண்பன் ஆர்யாவுக்காக

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நண்பன் ஆர்யாவுக்காக இஞ்சி இடுப்பழகி படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார் நடிகர் ஜீவா.

ஆர்யா - அனுஷ்கா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இஞ்சி இடுப்பழகி. இந்தப் படத்தில் சுமார் 20 கிலோ எடையை அதிகரித்து அனுஷ்கா நடித்திருக்கிறார்.

Jeeva Cameo in Inji Iduppazhagi

தமிழ் மற்றும் தெலுங்கில் இஞ்சி இடுப்பழகி ஒரே நேரத்தில் உருவாகியிருக்கிறது. குண்டாக இருக்கும் அனுஷ்கா உடல் எடையைக் குறைத்து எப்படி இஞ்சி இடுப்பழகி ஆகிறார் என்பதுதான் படத்தின் கதை.

இந்நிலையில் நடிகர் ஜீவா இந்தப் படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

திருநாள் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்து விட்ட ஜீவா, நண்பன் ஆர்யாவுக்காக இந்தப் படத்தில் ஒரு சுவாரசியமான சிறப்புத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறாராம்.

மேலும் மற்றொரு சிறப்புத் தோற்றத்தில் நடிகை ஹன்சிகாவை நடிக்க வைக்கவும் படக்குழுவினர் பேசி வருகிறார்களாம்.முன்னதாக சிவா மனசுல சக்தி படத்தில் ஆர்யா நடிக்க பதிலுக்கு, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஜீவா நடித்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

நண்பேன்டா!

English summary
Arya-Anushka starrer Inji Iduppazhagi, Actor Jeeva Has a interesting Guest Appearance in the film.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos