» 

விபூதி பூசி படத்தில் இருப்பது கமல் அல்ல, சுயம்புலிங்கம்

Posted by:

நான்குநேரி வானமாமலை ஆலயத்தின் ஜீயரின் முன்னால் கமல் நெற்றியில் விபூதியுடன் அமர்ந்திருக்கும் படம் வெளியாகி, அவரது நாத்திகத்தை கேள்விக்கும், கேலிக்கும் உட்படுத்தியுள்ளது.

ஆனால் இது படத்திற்கான கதாபாத்திரமான சுயம்புலிங்கமாக இருந்த போது சந்தித்த புகைப்படங்கள் என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.

த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கான பாபநாசம் படத்தின் தொடக்கவிழா படங்கள் வெளியான போதே கமல் சர்ச்சையில் சிக்கினார். தன்னை நாத்திகராக சொல்லிக் கொள்ளும் அவர், கையில் கிளாப் போர்டுடன் சாமி படங்களுக்கு முன் நின்றிருக்கும் புகைப்படம் வெளியாகி கமலின் நாத்திகத்தை கேள்விக்குள்படுத்தியது.

ஆன்மீக விஷயத்தில் கமல் இரட்டை வேடம் போடுகிறாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சினிமா என்பது சென்டிமெண்ட்களின் உலகம். இங்கு நாத்திகராக இருந்தாலும் பூஜையின் போது கற்பூரத்தை உங்கள் முன் நீட்டும் போது தொட்டு கும்பிட்டுதான் ஆகவேண்டும்.

படத்தின் நாயகன்

கமலுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும், பாபநாசம் வேறொருவர் தயாரிக்கிற படம். அவர்களின் நம்பிக்கையின்படி பூஜை போடும்போது படத்தின் நாயகன் என்ற முறையில் அதில் கலந்து கொள்வதை தவறாக கருத முடியாது. அதனை வைத்து அவர் ஆத்திகராகிவிட்டார் என்று கூறுவது நியாயமில்லை என்கின்றனர்.

ஜெயமோகன் சொல்வது என்ன?

நான்குநேரி வானமாமலை விஷயம் குறித்து ஜெயமோகன் தனது இணையத்தில் எழுதியுள்ளார். பாபநாசத்துக்கு அவர் வசனம் எழுதுவதால் படப்பிடிப்பில் நடந்த விஷயங்களையும், விபூதி பூசிய கமல் பற்றியும் அவர் நேரடியாக பார்த்து எழுதியிருக்கிறார்.

வானமாமலை ஆலயம்

நான்குநேரி வானமாமலை ஆலயம் தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதியில்லை. வானமாமலை ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் சில இடங்கள் மட்டும் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அந்த ஆலயத்தில் படப்பிடிப்பு நடத்த ஜீயரிடம் அனுமதி கேட்டுள்ளனர். அவரும் அனுமதி தந்துள்ளார். அதற்காக அவரை சந்தித்து கமல் நன்றி சொன்ன போது எடுத்த புகைப்படங்கள்தான் ஊடகங்களில் வெளியானவை.

 

இந்துவாக மாறிய கமல்

த்ரிஷ்யம் படத்தின் நாயகன் கிறிஸ்தவர். பாபநாசத்தில் அதனை இந்துவாக மாற்றியுள்ளனர். நாயகனின் - அதாவது கமலின் கதாபாத்திர பெயர் சுயம்புலிங்கம். நேட்டிவிட்டிக்காக இந்த மதமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆன்மீகவாதியல்ல

படத்தில் கோயில் சம்பந்தப்பட்ட காட்சிகளில் கமல் - அதாவது சுயம்புலிங்கம் நெற்றியில் விபூதியுடன் தோன்றுகிறார். படப்பிடிப்பின் போது நெற்றியில் பூசிக்கொண்ட விபூதியுடன் ஜீயரை சந்தித்ததைதான் கமல் ஆன்மீகவாதியாகிவிட்டார் என்று எழுதுகின்றனர்.

சுயம்புலிங்கம்

பாபநாசம் படத்தின் நாயகன் நான்காம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். தனது குடும்பத்துக்கு ஒரு இக்கட்டு வருகையில் தனது அனுபவத்தின் மூலம் கிடைத்த பட்டறிவை பயன்படுத்தி குடும்பத்தை காப்பாற்றுகிறார். அதாவது தனது சுயமான அறிவுடன். அதனால்தான் படத்தில் கமலின் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக சுயம்புலிங்கம் என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர்.

See next photo feature article

சர்ச்சை ஏன்

இந்த விவரங்கள் தெரியாமலே, கமல் நெற்றியில் விபூதியுடன் இருக்கும் படத்தை வைத்து இணையத்தில் சர்ச்சையை வளர்த்துவிட்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் ஜெயமோகன்.

Read more about: kamal, papanasam, cinema, கமல், ஹீரோ, சினிமா
English summary
According to writer Jeyamohan, who pens dialogues for the film, 'We had to shot few scenes inside temple. A portion of the temple, which is under the HR & CE department, is controlled by Vanamamalai Math.' Kamal called on the seer to seek permission. It was a courtesy call, he clarified. Interestingly, Kamal plays Suyambu Lingam, a Salivate in the film. It is directed by Jeetu Joseph.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos