»   »  பீகே ரீமேக்கில் நானா...?: கமல் விளக்கம்

பீகே ரீமேக்கில் நானா...?: கமல் விளக்கம்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'பீகே' பட ரீமேக்கில் நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர்கான், சஞ்சய் தத், அனுஷ்கா ஷர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பீகே'. வசூலில் சாதனை புரிந்த இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஜெமினி லேப் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

பீகே படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்க இருப்பதாகவும், பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பே இப்படத்தை இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இது தொடர்பாக நடிகர் கமல் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-

சொந்தத் தயாரிப்பு...

சொந்தத் தயாரிப்பு...

"இந்த படம் தொடர்பாக தயாரிப்பாளர்களோடு முதற்கட்ட பேச்சு வார்த்தை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. என்னுடைய அடுத்தப் படம் எனது சொந்த தயாரிப்பில்தான் இருக்கும்.

மொரிஷியஸில் தங்கி...

மொரிஷியஸில் தங்கி...

அதற்காகதான் இப்போது மொரிஷியஸில் தங்கி திட்டமிடும் வேலைகளை செய்துவருகிறேன். யாரோ முடிவாக 'பீகே' ரீமேக் குறித்து கொளுத்திப் போட்டுள்ளனர்.

எனது கோரிக்கைகள்...

எனது கோரிக்கைகள்...

எனது கோரிக்கைகளுக்கு ஒத்துவந்தால் மட்டுமே அந்தப் படத்தின் ரீமேக்கில் நடிப்பது குறித்து யோசிக்க முடியும். இல்லையென்றால் வேறு யாரேனும் அதில் நடிப்பார்கள்.

சுவாரசியமான படம் தான்...

சுவாரசியமான படம் தான்...

ஆனால் நிச்சயமாக 'பீகே' மிகவும் நல்ல சுவாரசியமான படம். யார் நடித்தாலும் வெற்றி நிச்சயம். அந்தப் படத்தில் நடிக்க நிறைய நடிகர் போட்டிபோட்டு முன்வருவார்கள்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
All the talk of veteran actor Kamal Haasan doing the Tamil version of Rajkumar Hirani's PK, is just talk, no more, says the actor.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos