twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோலிவுட்டுக்கு சிறுவனாக வந்து நடிப்பின் சிகரமாக உயர்ந்த கமல் ஹாஸன்

    By Siva
    |

    சென்னை: சிறுவனாக திரை உலகில் நுழைந்த கமல் ஹாஸன் இன்று நடிப்பின் சிகரமாக உயர்ந்து நிற்கிறார்.

    ஜெமினி கணேசன், சாவித்ரி நடித்த களத்தூர் கண்ணம்மாவில் அவர்களின் மகனாக நடித்து தனது திரை உலக பயணத்தை 5 வயதில் துவங்கியவர் கமல் ஹாஸன். அடடா பொடியன் என்ன அழகாக இருக்கிறான், அருமையாக நடிக்கிறான், அறிவாக பேசுகிறான் என்று களத்தூர் கண்ணம்மா படத்தை பார்த்தவர்கள் வியந்தனர்.

    அதன் பிறகு கமல் குழந்தை நட்சத்திரமாக எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்ட ஜாம்பவான்களுடன் நடித்தார். மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் மடியில் இருந்தவன் நான் என்று பெருமையாக சொல்லிக் கொள்வார் கமல்.

    அரங்கேற்றம்

    அரங்கேற்றம்

    கே. பாலச்சந்தர் இயக்கிய அரங்கேற்றம் படத்தில் குமரனாக கமல் நடித்தார். அதன் பிறகு அவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்தார்.

    மலையாளம்

    மலையாளம்

    தமிழில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இளைஞன் கமல் மலையாளம் பக்கம் சென்றார்.

    கன்னியாகுமரி

    கன்னியாகுமரி

    1974ம் ஆண்டு கன்னியாகுமரி என்ற மலையாள படத்தில் முதன்முதலாக ஹீரோவாக நடித்த கமலுக்கு பிலிம்பேர் விருதும் கிடைத்தது. இந்த படத்தை அடுத்து அவர் பல மலையாள படங்களில் நடித்து சேட்டன், சேச்சிகள் மனதில் இடம்பிடித்தார்.

    அபூர்வ ராகங்கள்

    அபூர்வ ராகங்கள்

    ரஜினிகாந்துடன் கமல் ஹாஸன் இணைந்து நடித்த அபூர்வ ராகங்கள் அவருக்கு நல்ல பெயருடன் பிலிம்பேர் விருதையும் பெற்றுக் கொடுத்தது.

    சப்பானி

    சப்பானி

    1977ம் ஆண்டு கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடித்த 16 வயதினிலே படத்தில் வரும் சப்பானி கதாபாத்திரத்தை யாரும் மறந்துவிட முடியாது.

    மூன்றாம் பிறை

    மூன்றாம் பிறை

    மூன்றாம் பிறை படத்தில் மனநலம் சரியில்லாத ஸ்ரீதேவியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளும் கமல் அவருக்கு குணமான பிறகு தன்னை நினைவுபடுத்த ரயில் நிலையத்தில் செய்யும் செயல்கள் நம்மை அழ வைக்கும்.

    புன்னகை மன்னன்

    புன்னகை மன்னன்

    புன்னகை மன்னன் கமலை பார்த்து மனதில் அவரை காதலனாக நினைத்தவர்கள் பலர். அந்த படத்தின் தீம் மியூசிக் இன்றும் மனதை வருடும்.

    நாயகன்

    நாயகன்

    மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் காலத்தால் அழியாத படம். அதை தழுவி பிறகு வந்த படங்கள் கூட வெற்றி பெற்றன.

    அபூர்வ சகோதரர்கள்

    அபூர்வ சகோதரர்கள்

    அபூர்வ சகோதரர்கள் படத்தில் வந்த அப்பு கமலை பற்றி கேட்டால் இன்றைய இளசுகளுக்கும் தெரியும். அப்படி நடிப்பால் அசத்தியிருப்பார் கமல்.

    மைக்கேல் மதன காமராஜன்

    மைக்கேல் மதன காமராஜன்

    மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமல் 4 கதாபாத்திரங்களில் நடித்து நம்மை சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்தியிருப்பார்.

    தேவர் மகன்

    தேவர் மகன்

    சிவாஜி கணேசன், கமல் ஹாஸன் நடித்த தேவர் மகன் பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் ஆனது. அந்த படத்தை பார்த்து கமல் போன்று மீசை வைத்து சுற்றியவர்கள் ஏராளம்.

    இந்தியன்

    இந்தியன்

    ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடித்த படம் இந்தியன். அந்த படத்தில் இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தில் கமல் ஹாஸன் நடித்திருந்தார் இல்லை வாழ்ந்திருந்தார்.

    அவ்வை சண்முகி

    அவ்வை சண்முகி

    அவ்வை சண்முகி படத்தில் பெண்ணாக மேக்கப்போட்டு பரபரவென அங்கும் இங்கும் ஓடி நடித்திருப்பார் கமல். ஆணழகனான அவர் பெண் வேடத்திலும் அம்சமாக இருந்தார்.

    பஞ்சதந்திரம், வசூல் ராஜா

    பஞ்சதந்திரம், வசூல் ராஜா

    கனத்த மனதுடன் இருப்பவர்கள் கூட பஞ்சதந்திரம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படங்களை பார்த்தால் மனம் இலேசாகிவிடும். அந்த அளவுக்கு காமெடியில் கலக்கி இருப்பார் கமல்.

    தசாவதாரம்

    தசாவதாரம்

    தசாவதாரம் படத்தில் கமல் ஹாஸன் 10 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். மேக்கப்புக்கும், கெட்டப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர் கமல்.

    விஸ்வரூபம்

    விஸ்வரூபம்

    கமல் நடித்த விஸ்பரூபம் படத்தை அவரால் என்றுமே மறக்க முடியாது. காரணம் படம் பல பிரச்சனைகளை சந்தித்து படாதபாடு பட்டு ரிலீஸானது.

    இந்தி, கன்னடம்

    இந்தி, கன்னடம்

    கமல் தமிழ், மலையாளம் தவிர இந்தி, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பன்முகம்

    பன்முகம்

    கமல் சிறந்த நடிகர் மட்டும் அல்ல, அருமையாக நடனம் ஆடுவார், பிரமாதமாக பாடுவார். படத்தில் நடிப்பதை தவிர இயக்கம் தெரியும், ஒளிப்பதிவும் தெரியும். மனதில் பட்டதை பேசும் துணிச்சல் கொண்டவர்.

    முடியாது

    முடியாது

    கமல் நடித்ததில் பல முக்கிய படங்களை விட்டுவிட்டீர்களே என்று நீங்கள் நினைக்கலாம். அவரின் நடிப்பை, திரை உலக பயணத்தை இந்த ஒரு செய்தியில் அடக்கிவிட முடியாது. அதனால் தான் ஒரு சில படங்களை மட்டும் குறிப்பிட்டுள்ளோம்.

    முன்மாதிரி

    முன்மாதிரி

    கமல் ஹாஸன் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்பவர். அவரை பார்த்து தங்களை மாற்றிக் கொள்ளும் நபர்கள் ஏராளம், ஏராளம். அத்தகைய கலைஞன் இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு எங்களின் வாழ்த்துக்கள்.

    English summary
    Kamal Haasan who entered Kollywood as an adorable child artist is a legend now.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X