» 

அமெரிக்கா போனார் கமல்!

Posted by:
 

விஸ்வரூபம் படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் கமல்பஹாஸன் நேற்று அமெரிக்கா புறப்பட்டார்.

கமல், பூஜா குமார் நடிக்கும் பிரமாண்ட படம் விஸ்வரூபம். ரூ 120 கோடி செலவில் உருவாக்கப்படுவதாக இந்தப் படம் குறித்து சமீப காலமாக செய்தி வெளியிட்டு வருகிறார் கமல்ஹாஸன்

இந்தப் படத்தின் பெரும்பகுதி வெளிநாடுகளி்ல்தான் நடக்கிறது. ஏற்கெனவே குறிப்பிட்ட அளவு காட்சிகளை இந்தியாவில் முடித்துவிட்ட கமல், மீதியுள்ள பகுதிகளை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நடத்துகிறார்.

முதல்கட்டமாக கமல் நேற்று அமெரிக்கா புறப்பட்டார்.அமெரிக்கா ஷூட்டிங் முடிந்ததும் ஐரோப்பிய நாடுகளிலும் ஷூட்டிங் நடக்கும். இந்த இரு ஷெட்யூலும் முடிந்த பிறகு சென்னை திரும்புகிறார் கமல்.

2012-ன் மெகா ரிலீஸாக விஸ்வரூபத்தை வெளியிட கமல் திட்டமிட்டுள்ளார்.

Read more about: கமல், kamal, விஸ்வரூபம், அமெரிக்கா
English summary
Kamal Hassan departed from Chennai airport to US on Thursday for his directorial venture Vishwaroopam.

Tamil Photos

Go to : More Photos