»   »  நமக்குள் ஒற்றுமை வேண்டும்.... நல்ல முடிவுகளை விரைவில் எடுங்கள் - கமல்

நமக்குள் ஒற்றுமை வேண்டும்.... நல்ல முடிவுகளை விரைவில் எடுங்கள் - கமல்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இப்பொதுக்குழு கூட்டத்தில் ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

கமல் நேரில் வராவிட்டாலும் பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்களிடையே ஸ்கைப் தொழில்நுட்பம் மூலமாக திரையில் தோன்றி நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

Kamal urges Nadigar Sangam  to take decisions soon

அப்போது அவர், நமது இடத்தில் பொதுக்குழு நடத்த வேண்டும் என்று ஆசைபட்டேன். அதை நடத்த வைத்தவர்களுக்கு நன்றி. நமக்குள் ஒற்றுமை வேண்டும். என்னை விட வயதில் இளையவர்களுக்கு நல்ல நட்பும், நேசமும் இருக்கிறது. அதற்காக தான் இளைஞர்கள் எல்லாம் ஒன்றுக் கூடி இப்பொதுக்குழுவை நடத்தி வருகிறார்கள். நாங்கள் எல்லாம் ஒதுங்கியிருந்து ரசித்து வருகிறோம்.

நல்ல முடிவுகளை விரைவில் எடுங்கள். நம்முடன் வர மறுப்பார்களுக்கும் அழைப்பு விடுங்கள். பெரிய மனிதர்களாவது அப்படித்தான் என நான் நினைக்கிறேன் என்று கமல் தெரிவித்தார்.

English summary
Actor Kamal Haasan has urged the Nadigar Sangam to take appropriate decisions soon.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos