twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “எல்.எஸ்.டி” நோய் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கைகோர்த்த நடிகர் கார்த்தி!

    |

    சென்னை: லியோசாமல் ஸ்டோரேஜ் டிஸ்ஆர்டர் என்ற நோய்க்கு எதிராக போராடி வரும் அமைப்பும், நடிகர் கார்த்தியும் அதுதொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தில் கை கோர்த்துள்ளனர்.

    எல்எஸ்டி எனப்படும் இந்த நோய் குறித்த விழிப்புணர்வுக்கு கார்த்தி உதவி செய்யவுள்ளார். இதுதொடர்பான நிகழ்ச்சி சென்னை பாரதிய வித்யா பவனில் நடைபெற்றது.

    அதில் நடிகர் கார்த்தி, டாக்டர்கள், நோயாளிகள், அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆயுள் முழுவதும் சிரமம்:

    ஆயுள் முழுவதும் சிரமம்:

    எல்எஸ்டி பாதிப்புக்குள்ளான நோயாளிகள் தங்களது ஆயுள் முழுவதும் அதன் சிரமத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது. அவர்களது சிரமங்கள், அவர்களுக்குத் தேவையான சிகிச்சைக்கான அரசு உதவிகள் உள்ளிட்டவை பெருமளவில் தேவைப்படுகிறது. இதுகுறித்த கோரிக்கைகள் இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

    உதவி அவசியம் தேவை:

    உதவி அவசியம் தேவை:

    மேலும் சிகிச்சைக்காக அரசுகள் உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு சிகிச்சை செலவை ஏற்று உதவிட வேண்டும் என்று கோரி ஏற்கனவோ லியோசோமல் ஸ்டோரேஜ் டிஸ்ஆர்டர் ஆதரவுக் கழகம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    மக்களிடம் விழிப்புணர்வு இல்லை:

    மக்களிடம் விழிப்புணர்வு இல்லை:

    நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசுகையில், "இந்த நோய் குறித்த விழிப்புணர்வு இந்தியாவில் குறைவாக உள்ளது. இந்தக் குழந்தைகளும், இவர்களின் பெற்றோர்களும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

    சிகிச்சை வசதி தேவை:

    சிகிச்சை வசதி தேவை:

    இவர்களுக்கு உதவ அரசு முன்வர வேண்டும். அவர்களுக்குத் தேவையான சிகிச்சை வசதியை அரசு செய்து தர வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    English summary
    The Lysosomal storage disorder support society (LSDSS) and leading Tamil actor, Karthi Sivakumar, through their collaboration, continue to raise awareness on Lysosomal storage disorder (LSDs) which are also known as Ultra-Rare Disorders.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X