»   »  அர்விந்த் சாமி, மாதவன், அடுத்து துல்கர் சல்மான்.. மணியின் மணியான தேர்வு!

அர்விந்த் சாமி, மாதவன், அடுத்து துல்கர் சல்மான்.. மணியின் மணியான தேர்வு!

Posted by:
Subscribe to Oneindia Tamil

எப்போதுமே தன் படங்களில் அழகான ஹீரோக்களை அறிமுகம் செய்வார் மணி ரத்னம். அந்த வரிசையில் இப்போது துல்கர் சல்மான் வந்திருக்கிறார்.

ஏற்கெனவே ஒரு தமிழ்ப் படத்தில் நடித்திருந்தாலும், ஓகே கண்மணிதான் முதல் படம் எனும் அளவுக்கு அமைந்துவிட்டது துல்கருக்கு.

அரவிந்த் சாமி

தொன்னூறுகளில் மணிரத்னத்தால் அறிமுகம் செய்யப்பட்டவர் அர்விந்த்சாமி. படம் தளபதி. ரஜினி, மம்முட்டி என பெரும் ஜாம்பவான்கள் இருந்தாலும், தனித்துத் தெரிந்தார் அவர். அதன் பிறகு பல இளம் பெண்களின் விருப்ப நாயகனாகத் திகழ்ந்தார்.

மாதவன்

அதே போல 2000 ஆண்டுகளில் மாதவனை பிரபலமாக்கினார். மிகச் சிறந்த நடிகராக அவர் வலம் வருகிறார். அலைபாயுதே, ஆயுத எழுத்து போன்ற படங்கள் அவருக்கு அதிக ரசிகைகளை சம்பாதித்துக் கொடுத்தன.

கவுதம் கார்த்திக்

சில ஆண்டுகளுக்கு முன்பு கடல் படம் மூலம் கவுதம் கார்த்திக்கை அறிமுகப்படுத்தினார். படம் சரியாகப் போகாவிட்டாலும், கவுதமை முன்னணி நடிகராக்கியுள்ளது.

துல்கர்

இப்போது துல்கர் சல்மான். இவர் ஏற்கெனவே வாயை மூடிப் பேசவும் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்தப் படத்தை விட, இந்த ஓ காதல் கண்மணிதான் அவரை வெகுஜனங்கள் மத்தியில் பிரபலமாக்கியிருக்கிறது.

ஆர்யாவை பின்னுக்குத் தள்ளினார்

எந்த அளவுக்கு என்றால், ஒரு முன்னணி நிறுவனம் தனது தயாரிப்புகளின் விளம்பரத் தூதராக துல்கரை ஒப்பந்தம் செய்யும் அளவுக்கு.

இதற்கு முன் தூதராக இருந்தவர் யார் தெரியுமா..? ஆர்யா! அவரை நீக்கிவிட்டுத்தான் துல்கரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

 

English summary
The audience verdict on O Kadhal Kanmani has promoted its hero Dulquer Salmaan as a brand ambassador for a leading company.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos