twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோ புரமோஷன்: ஒரே கல்லில் பல மாங்காய்களைப் பறிக்கும் இசையமைப்பாளர்கள்

    By Manjula
    |

    சென்னை: இசையமைப்பாளர், ஹீரோ என ஒரே நேரத்தில் இரட்டை குதிரையில் பயணிக்கவே தற்போதைய இசையமைப்பாளர்கள் ஆசைப்படுகின்றனர்.

    விஜய் ஆண்டனி தொடங்கி சந்தோஷ் நாராயணன் வரை அனைவரையும் ஹீரோ ஆசை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

    தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இசையமைப்பாளர்கள் திடீர், திடீரென ஹீரோவாக உருவெடுத்து வருகின்றனர்.

    அந்த வகையில் சமீபத்திய ஹீரோ பட்டியலில் இணைந்த இசையமைப்பாளர்கள் மற்றும் அதற்கான காரணங்களை இங்கே பார்க்கலாம்.

    விஜய் ஆண்டனி

    விஜய் ஆண்டனி

    சுக்ரன் மூலம் இசையமைப்பாளராக திரை வாழ்க்கையைத் தொடங்கிய விஜய் ஆண்டனிக்கு ஒரு சுபயோக தினத்தில் ஹீரோ வாய்ப்பு வந்து கதவைத் தட்டியது. விளைவு நான் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி சலீம், இந்தியா- பாகிஸ்தான், பிச்சைக்காரன் என்று தொடர் வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கிறார். சைத்தான், எமன், ஹிட்லர், திருடன் என்று ஏகப்பட்ட படங்களில் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். பிச்சைக்காரன் வெற்றியால் படங்களின் பெயர்களில் ஏகப்பட்ட செண்டிமெண்ட்களை உடைத்து வருகிறார்.

    ஜி.வி.பிரகாஷ் குமார்

    ஜி.வி.பிரகாஷ் குமார்

    ஹீரோவாக நடிக்கும் ஆசையில் டார்லிங் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்தார். டார்லிங் கைகொடுத்ததில் அடுத்து த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் நடிக்க படம் நல்ல வெற்றி பெற்றது. இன்று தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவராக அறியப்படும் ஜி.வியின் கைவசம் தற்போது புருஸ்லீ, கடவுள் இருக்கான் குமாரு, கெட்ட பையன்டா இந்த கார்த்தி, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, வெர்ஜின் மாப்பிள்ளை ஆகிய படங்கள் உள்ளன. தொடர் வெற்றிகளால் இவரின் அறிமுகப் படமான பென்சில் விரைவில் வெளியாகவுள்ளது.

    தேவி ஸ்ரீ பிரசாத்

    தேவி ஸ்ரீ பிரசாத்

    விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவி ஸ்ரீ பிரசாத். தமிழ், தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைக்கும் படங்களில் அவ்வப்போது தலை காட்டி வந்தார். இந்நிலையில் இவருக்கும் ஹீரோவாகும் ஆசை வந்திருக்கிறது. இவரின் நண்பரும், இயக்குநருமான சுகுமார் இயக்கும் புதிய படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் நாயகனாக நடிக்கவிருக்கிறார். அறிமுகப் படத்திலேயே சாருக்கு 2 ஹீரோயின்களாம்! 2 ஹீரோயின்களில் ஒருவராக சமந்தாவை நடிக்க வைக்கப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

    ஹிப்ஹாப் ஆதி

    ஹிப்ஹாப் ஆதி

    இசையமைப்பாளர் டு ஹீரோ வரிசையில் தற்போது ஹிப்ஹாப் ஆதி, சந்தோஸ் நாராயணன், அனிருத் ஆகியோர் விரைவில் இணையப் போவதாக கூறுகின்றனர். யுவன், ஹாரிஸ் ஜெயராஜ், இமான் போன்ற ஒருசில இசையமைப்பாளர்கள் மட்டுமே இதுவரை இந்தப் பட்டியலில் இணையவில்லை.

    ஆட்டிப் படைக்கும் ஆசை

    ஆட்டிப் படைக்கும் ஆசை

    முன்பெல்லாம் இசையமைப்பாளர்கள் ஹீரோவாக மாறுவது மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை அவ்வாறு இல்லை. கோலிவுட்டுக்கு புதிதாக வரும் இசையமைப்பாளர்கள் கூடவே ஹீரோ ஆசையையும் கூட்டி வருகின்றனர். இதனால் தமிழ் சினிமாவில் தற்போது இசையமைப்பாளர்களுக்கு பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

    பல மாங்காய்கள்

    பல மாங்காய்கள்

    ஒரு படத்தில் இசையமைப்பாளர் ஹீரோவாக நடிப்பதால் பல நன்மைகள் இருக்கின்றன. ஹீரோ+ இசையமைப்பாளர் என இரண்டு பேருக்கு தயாரிப்பாளர் தனித்தனி சம்பளம் கொடுக்கும் நிலை இல்லை. படத்தில் ஹீரோ தொடர்பான எந்த கால்ஷீட் பிரச்சினையும் இயக்குநருக்கு இருக்காது. ஆசைக்காக நடிப்பதால் சம்பளம் பெரிதாக கொடுக்க வேண்டிய அவசியமில்லை. குறைந்த பட்ஜெட்டில் கையைக் கடிக்காமல் படத்தை எடுத்து விடலாம்.

    பாடல்கள்

    பாடல்கள்

    இசையமைப்பாளர்களே ஹீரோவாக நடிப்பதால் பாடல்களைப் பார்த்துப்பார்த்து ஹிட் செய்து விடுகிறார்கள். சமயங்களில் படத்தில் இடம்பெறும் ஒருசில பாடல்களையும் இவர்களே பாடி விடுகிறார்கள். மேலும் பெரிய ஹீரோயின் தான் வேண்டும் என இவர்கள் அடம்பிடிப்பதில்லை.(ஒருசிலர் விதிவிலக்கு) இப்படிப் பலவேறு மாங்காய்களை இசையமைப்பாளர்கள் ஒரே கல்லில் அடிப்பதால் தான், இவர்களின் ஹீரோ ஆசைக்கு யாரும் குறுக்கே நிற்பது கிடையாதாம்.

    English summary
    After Vijay Antony, G.V.Prakash now Many Music Directors Turned Hero in Kollywood.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X