» 

எனக்கு பட்டம் வேண்டாம்... சிவகார்த்திக்கேயன்

Posted by:

வளர்ந்து வரும் இளம் நடிகர் சிவகார்த்திக்கேயன் அறிமுக நாயகிகளுடன் மட்டுமே ஜோடியாக நடித்து வந்தார். முதன் முறையாக மான் கராத்தே படத்தில் அவருக்கு பிரபல நாயகி ஹன்சிகா ஜோடி சேர்ந்துள்ளார்.

இது நிறைய இளம் நடிகர்களுக்கு காதில் புகையை வரவழைத்திருக்கிறாதாம். பலரும் பொறாமையால் பொசுங்கினாலும் சிலர் வாய்விட்டே கேட்டு விட்டார்களாம்.

தன்னுடைய இந்த வெற்றிக்குக் காரணம் மக்கள்தான் என்று கூறும் சிவகார்த்திக்கேயன், அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருப்பதாக சொல்கிறார்.

சம்பளத்தை ஏற்றினேனா?

ஒருகோடி, இரண்டு கோடி இப்போது 5 கோடியாக உயர்ந்து விட்டது சிவகார்த்திக்கேயன் சம்பளம் என்கின்றன ஊடகச் செய்திகள். தான் ஒருபோதும் சம்பளத்தை ஏற்றவில்லை என்கிறார் அவர்.தயாரிப்பாளர்கள் முடிவு செய்து தருவதை தான் வாங்கிக் கொள்வதாக கூறுகிறார்.

சண்டைக்காட்சி வேணாம்

சிவகார்த்திக் கேயன் ஒரே மாதிரி நடிப்பதாக புகார் உள்ளது. இனி வரும் படங்களில் மாற்றம் இருக்கும். பறந்து பறந்து சண்டை போடும் காட்சிகள் தனக்கு வேண்டாம் என்கிறார்.

பட்டம் வேண்டாமே

தன் பெயருக்கு முன்னால் பட்டம் போட்டுக் கொள்ளும் ஆசை எதுவும் இல்லையாம். வளர்ந்து வரும் நடிகரான தன்னை பட்டம் கொடுத்து பேக் பண்ணி அனுப்பிவிட வேண்டாம் என்கிறார்.

See next photo feature article

பொறாமையா?

மான் கராத்தே படத்தில் ஹன்சிகா ஜோடியாக நடிப்பது பற்றி பலரும் அவரிடமே பலரும் கேட்டு விட்டார்களாம். 7 நாள் மட்டுமே இதுவரை சேர்ந்து நடித்திருப்பதாக கூறியுள்ளார் சிவகார்த்திக்கேயன்.

Read more about: hanshika, sivakarthikeyan, cinema, சிவகார்த்திக்கேயன், ஹன்சிகா, சினிமா
English summary
Actor Sivakarthikeyan has said that he doesnt want any title behind his name
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos