»   »  திருட்டு டிவிடியால் பாலகிருஷ்ணாவின் படத்திற்கு பாதிப்பே இல்லையாம்: ஏன் தெரியுமா?

திருட்டு டிவிடியால் பாலகிருஷ்ணாவின் படத்திற்கு பாதிப்பே இல்லையாம்: ஏன் தெரியுமா?

Posted by:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: திருட்டு டிவிடியால் எல்லாம் தனது படத்தின் வசூல் பாதிக்கவே பாதிக்காது என்று நடிகர் பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு லயன் என்ற ஒக்கே ஒக்க படத்தில் மட்டும் தான் பாலகிருஷ்ணா நடித்திருந்தார். இந்நிலையில் அவர் பொங்கல் ரேஸில் தனியாக இல்லை. ஜனவரி 14ம் தேதி பாலகிருஷ்ணாவின் டிக்டேட்டர் படம் வெளியாக உள்ளது.

அதே நாளில் நாகர்ஜுனாவின் சொக்கடே சின்னி நாயனா, சர்வானந்தின் எக்ஸ்பிரஸ் ராஜா ஆகிய படங்களும் ரிலீஸாகின்றன.

விளம்பரம்

பாலைய்யா என்று ரசிகர்களால் பாசத்தோடு அழைக்கப்படும் பாலகிருஷ்ணா தனது டிக்டேட்டர் படத்தை முழுமூச்சில் விளம்பரம் செய்து வருகிறார்.

திருட்டு டிவிடி

திருட்டு டிவிடி என்பது சினிமாத் துறையின் சாபம் ஆகும். ஆனால் எந்த திருட்டு டிவிடியாலும் என் பட வசூலை பாதிக்க முடியாது என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பாலைய்யா.

ரசிகர்கள்

என் படத்தை ரசிகர்கள் லேப்டாப், டேப்பில் சிறிய திரையில் பார்க்க விரும்ப மாட்டார்கள். மாறாக தியேட்டரில் பெரிய திரையில் தான் பார்த்து ரசிக்க விரும்புவார்கள். அதனால் தான் திருட்டு டிவிடியால் என் பட வசூல் பாதிக்காது என்று பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

தியேட்டர்

தியேட்டரில் படம் பார்த்து என் பஞ்ச் வசனங்கள், பாடல்களை கேட்டு ஆட்டம் போட ரசிகர்கள் விரும்புபவர்கள். அப்படிபட்டவர்கள் எப்படி வீட்டில் டிவிடியில் என் படத்தை பார்ப்பார்கள் என்று கேட்கிறார் டிக்டேட்டர்.

English summary
Telugu actor Balakrishna told that piracy cannot affect his films' business.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos