»   »  பாகுபலிக்கு இந்த வருஷமே திருமணம்: காதல்+அரேஞ்ச்

பாகுபலிக்கு இந்த வருஷமே திருமணம்: காதல்+அரேஞ்ச்

Posted by:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகர் பிரபாஸுக்கு இந்த ஆண்டே திருமணம் என்றும், அது காதல் மற்றும் பெற்றோர் ஏற்பாடு செய்வது என்றும் அவரது பெரியப்பாவும், நடிகருமான கிருஷ்ணம் ராஜு தெரிவித்துள்ளார்.

Select City
Buy Baahubali 2: The Conclusion (U/A) Tickets

பாகுபலி படத்தில் நடித்ததால் பிரபாஸ் திருமணத்தை தள்ளிப் போட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் பாகுபலி படத்தில் நடிக்கையில் பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் இடையே காதல் மலர்ந்துவிட்டது என்றும், அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் செய்திகள் வெளியாகின.


பாகுபலி 2 படத்தில் நடிப்பதால் இந்த ஆண்டும் அவர் திருமணம் செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது.


திருமணம்

திருமணம்

இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்வதாக பிரபாஸ் எனக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அவருக்கு ஏற்ற பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறோம் என்று அவரது பெரியப்பாவும், நடிகருமான கிருஷ்ணம் ராஜு தெரிவித்திருந்தார்.
அந்த பெண்?

அந்த பெண்?

பிரபாஸுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது என்று கூறி ஒரு பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. அது பற்றி பிரபாஸ் எதுவும் கூறவில்லை. ஆனால் கிருஷ்ணம் ராஜு தான் விளக்கம் அளித்தார். யாரோ ஒரு பெண்ணின் புகைப்படத்தை பிரபாஸின் வருங்கால மனைவி என்று பரப்புவதா என்று அவர் விளாசினார்.


காதல் மற்றும்

காதல் மற்றும்

பிரபாஸின் திருமணம் பற்றி தற்போது மீண்டும் கிருஷ்ணம் ராஜுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், பிரபாஸின் திருமணம் காதல் மற்றும் பெற்றோர் ஏற்பாடு செய்வதாக இருக்கும். இந்த ஆண்டே திருமணம் நடக்கும் என்றார்.


யார் அது?

யார் அது?

காதல் மற்றும் பெற்றோர் ஏற்பாடும் செய்யும் திருமணம் என்றால் பிரபாஸுக்கு ஏற்கனவே பெண் கிடைத்துவிட்டது. அந்த பெண் யாராக இருக்கும் என்று ரசிகர்கள் ரூம் போட்டு யோசித்தபோது ஒருவரின் நினைவு தான் அவர்களுக்கு வந்துள்ளது. யார் என உங்களுக்கு தெரிகிறதா?


English summary
Our very own Baahubali, Prabhas might get hitched by this year-end, according to what his uncle Krishnam Raju has to say about the actor's big day.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos