»   »  சூர்யாவுக்கு அப்பா ஆன 'கொம்பன்' கார்த்தியின் மாமனார்

சூர்யாவுக்கு அப்பா ஆன 'கொம்பன்' கார்த்தியின் மாமனார்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முத்தையா இயக்கும் புதிய படத்தில் சூர்யாவுக்கு அப்பாவாக நடிக்கிறார் ராஜ் கிரண்.

சூர்யா எஸ்.3 படத்தை அடுத்து ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பாரா, முத்தையா படத்தில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சூர்யா முத்தையாவை தேர்வு செய்துள்ளார். எஸ். 3 வேலைகள் முடிந்த பிறகு முத்தையா படத்தில் நடிக்கிறார்.

Raj Kiran is Suriya's dad now

முத்தையா சூர்யாவுக்காக நல்ல குடும்பப் பாங்கான கதையை தயார் செய்து வைத்துள்ளாராம். படத்தில் சூர்யாவுக்கு அப்பாவாக ராஜ்கிரண் நடிக்கிறார். குடும்ப கதைக்கு அதுவும் அப்பா கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவரை தான் முத்தையா தேர்வு செய்துள்ளார்.

முன்னதாக முத்தையா இயக்கிய கொம்பன் படத்தில் கார்த்திக்கு பாசமான மாமனாராக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் ராஜ் கிரண். தம்பிக்கு மாமனாராக நடித்த அவர் தற்போது அண்ணனுக்கு தந்தையாக நடிக்கிறார்.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷை தேர்வு செய்துள்ளார்களாம்.

English summary
Raj Kiran is reportedly acting as Suriya's father in director Muthaiah's upcoming movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos