twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி மாறிட்டாரு.. ரசிகர்கள் எப்போ?

    By Veera Kumar
    |

    சென்னை: கபாலி திரைப்படம், 'ரஜினி ரசிகர்கள்' எதிர்பார்ப்புக்கு ஏற்றவகையில் இல்லை என்று சில முனுமுனுப்புகள் கேட்கின்றன. ஆனால், 'ரசிகர்கள் எதிர்பார்ப்பு' என்பதுதான் என்ன என்பதுதான் இப்போது எஞ்சியுள்ள கேள்வி.

    கபாலி திரைப்படம் குறித்து வைக்கப்படும் பல்வேறு விமர்சனங்களில் ஒன்று, அவரை எப்போதுமே ஹைப்பில் வைத்திருக்கவில்லை. வில்லன் கதாப்பாத்திரத்தை படம் முழுக்க ரஜினி, பந்தாடிக்கொண்டே இருக்க வேண்டும்.

    வழக்கமான ரஜினி மசாலா படங்களை போல, வில்லன் ஒருமுறை கை ஓங்க அனுமதிக்கலாம். மற்றபடி படம் முழுக்க ரஜினிதான் ஆட்சி செய்ய வேண்டும் என்பது அந்த விமர்சனங்களில் ஒன்று.

    லிங்கா மீது பழி ஏன்?

    லிங்கா மீது பழி ஏன்?

    ஆனால், இதே ரசிகர்கள்தான், லிங்கா திரைப்படத்தின், கிளைமேக்ஸ் காட்சியில் பாராசூட்டில் இருந்து ரஜினி குதித்து சண்டை போட்டபோது, "இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு..." என சிம்பிளாக கமெண்ட் போட்டு, படத்தை காலி செய்தனர்.

    மாற்றி பேசலாமா

    மாற்றி பேசலாமா

    சரி.. நம்புற மாதிரி நடிக்கலாம் என்று நினைத்து, யதார்த்த இயக்குநர் என்று பெயரெடுத்த ரஞ்சித்தை அணுகியது ரஜினி தரப்பு. ஆனால், கபாலி படத்தை பார்த்துவிட்டு, ரஜினி இப்படியா படாதபாடு படுவது, பறந்து பறந்து அடித்திருக்க வேண்டாமா என அப்படியே மாற்றி பேசுவதும் இதே நடுநிலையாளர்கள்தான்.

    மாஸ் படங்கள்

    மாஸ் படங்கள்

    அண்ணாமலையைவிட, பாட்ஷா ஒருபடி மேலே ரஜினியை தூக்கி நிறுத்தியது. பாட்ஷாவை சமப்படுத்தியது படையப்பா. சிவாஜி அனைத்து தரப்பு ரசிகர்களையும் குஷிப்படுத்தியது. எந்திரன், நகர்ப்புறம் தவிர்த்து பிற பகுதி தாய்க்குலங்களை பெரிதாக ஈர்க்க முடியவில்லை என்றாலும் பிற தரப்பை ஈர்த்து வசூல் சாதனைபடைத்தது.

    வெள்ளைமுடி தைரியம்

    வெள்ளைமுடி தைரியம்

    ரஜினி படைத்த இந்த சாதனைகளை அவரே முறியடித்தாகிவிட்டது. இனிமேல், அவர் செல்ல வேண்டிய பாதை தனது வயதுக்கு தக்க பாத்திரங்கள்தான். இதை அவரே உணர்ந்ததால்தான், கபாலி படத்தில் முக்கால்வாசி வெள்ளை முடியோடு காட்சியளிக்கிறார் ரஜினி. இப்படி அவர் திரையில் தோன்றுவதை 10 வருடம் முன்பு நினைத்து பார்த்திருக்க முடியுமா?

    பூட்டி வைத்த ரசிகர்கள்

    பூட்டி வைத்த ரசிகர்கள்

    இளமை காலங்களிலேயே, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, போன்ற அழுத்தமான படங்களில் முதிர்ச்சி காட்டி, கர்ஜித்த நடிப்பு சிங்கத்தை, சூப்பர் ஸ்டார் என்ற இரும்பு வளையத்திற்குள் இத்தனை வருடம் பூட்டி வைத்தாகிவிட்டது. இனியாவது, ரஜினியின் நடிப்பு திறமைக்கு தீனி போடலாமே, கபாலி போன்ற படங்களை வைத்து.

    நடிகனை நடிக்க விடுங்கள்

    நடிகனை நடிக்க விடுங்கள்

    கபாலி டயலாக்கை உல்டா செய்து கூறுவதென்றால், நடிகனின் இயல்பே, நடிப்பதுதான். அந்த நடிகனை, மாஸ் ஹீரோ என்ற கூண்டுக்குள் அடைத்து வைக்காதீர்கள். திறந்து விடுங்கள். வெற்றியா, தோல்வியா என்பதை நடிகனே முடிவு செய்யட்டும்.

    ரசிக்க விஷயம் இருக்கு

    ரசிக்க விஷயம் இருக்கு

    இனத்திற்காக போராடும் போராளியாகவும், மனைவி, குழந்தைகளை தேடும் பாசமிகு குடும்ப தலைவனாகவும், பிரிந்தவர்களை மீண்டும் பார்க்கும்போது, முகத்தில் காண்பிக்கும் எக்ஷ்பிரஷனாகட்டும், ப்ப்ப்பா.. ரஜினி என்ற மா நடிகனை கொண்டாட எவ்வளவோ விஷயம் படத்தில் உள்ளது. இது முழுக்க முழுக்க ரஜினி நடிப்பின் மீது மட்டுமே பயணப்படும் கப்பல். வரும் துப்பாக்கி குண்டுகளை கைகளால் பிடித்து திருப்பியனுப்பும் முந்தைய விட்டாலாச்சாரியா மாயாஜால ரஜினி படங்களை போல எண்ணி படம் பார்க்காதீர்கள்.

    மாற வேண்டிய தருணம்

    மாற வேண்டிய தருணம்

    அதற்காக, கபாலி படத்தில் எல்லாமே சரியா.. என்ற கேள்வியை நீங்கள் எழுப்ப கூடும். உண்மைதான். யதார்த்த இயக்குநர் ரஞ்சித் பல காட்சிகளை கோர்வையின்றி, நம்ப முடியாதபடி எடுத்துவிட்டார். முள்ளும்மலரும் என்று விளம்பரப்படுத்தாமல், பாட்ஷா என்ற முகமூடியை படத்திற்கு அணிவித்து, ஃபர்ஸ்ட் லுக் முதல் ஃபர்ஸ்ட் ஷோ பார்க்கும்வரை மடைமாத்து செய்துவிட்டார் தயாரிப்பாளர் தாணு. ஆனால், இதற்காக கோபித்துக் கொண்டு ரஜினியை மீண்டும் மரத்தை சுற்றி டூயட் பாட அனுமதித்துவிடாதீர்கள் ரசிகர்களே. வருங்காலம் உங்களை மன்னிக்காது.

    English summary
    Rajini changed his path from commercial hero to normal style of acting, will the fans change?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X