twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லிங்காவில் ரஜினிக்கு சம்பளம் ரூ 60 கோடி... ஆசியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்!

    By Shankar
    |

    லிங்கா படத்தில் ரஜினிகாந்துக்கு சம்பளமாக ரூ 60 கோடி தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார் ரஜினி.

    மேலும் ஆசிய அளவில் சம்பளமாக இவ்வளவு தொகை பெறும் முதல் நடிகரும் ரஜினிதான்.

    பெரிய பட்ஜெட்

    பெரிய பட்ஜெட்

    லிங்கா படம் ரூ 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமை ரூ 165 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இசை வெளியீட்டு உரிமைக்கு ரூ 7 கோடி தரப்பட்டுள்ளது.

    தொலைக்காட்சி

    தொலைக்காட்சி

    பெரும் தொகைக்கு இப்படத்தின் தொலைக்காட்சி உரிமை விலை பேசப்பட்டு வருகிறது.

    ரஜினி அண்ணன்

    ரஜினி அண்ணன்

    படத்தை முனிரத்னா வழங்க ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார். இதில் இன்னொரு தயாரிப்பாளராக ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா உள்ளார். படத்தின் லாபத்தில் அவருக்கும் ஒரு பங்கு தரப்படுகிறது.

    சம்பளம்

    சம்பளம்

    இப்படத்தில் ரஜினிக்கு சம்பளமாக ரூ 60 கோடி தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரி செலுத்தப்பட்ட பிறகு, காசோலை மூலம் இந்தத் தொகை தரப்பட்டுள்ளது.

    இந்தியாவில்

    இந்தியாவில்

    இந்திய சினிமாவில் இந்த அளவு சம்பளம் பெறும் ஒரே நடிகர் ரஜினிதான். சந்திரமுகி படத்திலிருந்து இந்த சாதனையை அவர் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

    ஜாக்கி சான்

    ஜாக்கி சான்

    ஆசிய அளவிலும் அதிக சம்பளம் பெறும் நடிகர் ரஜினிதான். ஜாக்கி சான் பெரும்பாலும் வேறு தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடிப்பதில்லை என்பதால் அவரது வருவாய் சம்பளமாகக் கொள்ள முடியாது.

    English summary
    Rajinikanth has received Rs 60 lakhs as salary for Lingaa movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X