»   »  மண்டைய மண்டைய ஆட்டிட்டு...: ஷாருக்கான் மீது கொலவெறியில் ரஜினியின் நண்பர்

மண்டைய மண்டைய ஆட்டிட்டு...: ஷாருக்கான் மீது கொலவெறியில் ரஜினியின் நண்பர்

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பேசுவதெல்லாம் பேசிவிட்டு ரித்திக் ரோஷனின் காபில் ரிலீஸாகும் அதே நாளில் தனது ரயீஸ் படத்தை வெளியிடும் ஷாருக்கான் மீது ரித்திக்கின் தந்தை ராகேஷ் ரோஷன் கடுப்பில் உள்ளார்.

தந்தை ராகேஷ் ரோஷன் தயாரிப்பில் ரித்திக் ரோஷன் பார்வையற்றவராக நடித்துள்ள காபில் படம் வரும் 25ம் தேதி ரிலீஸாகிறது. அதே நாளில் ஷாருக்கானின் ரயீஸ் படமும் வெளியாகிறது.

இந்நிலையில் இது குறித்து ராகேஷ் ரோஷன் ஷாருக் மீது கோபத்தில் உள்ளார்.

காபில்

காபில்

காபில் படம் ஜனவரி 25ம் தேதி வெளியாகும் என முதலில் ராகேஷ் அறிவித்தார். அதன் பிறகே அதே தேதியில் தனது படம் ரயீஸ் வெளியாகும் என ஷாருக்கான் அறிவித்தார்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

ரயீஸ் ரிலீஸ் தேதியை முடிவு செய்யும் முன்பு ஷாருக்கான் ராகேஷை சந்தித்து பேசியுள்ளார். இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானால் வசூல் பாதிக்கும், உங்கள் படத்தை காபிலுக்கு 2 வாரங்களுக்கு முன்போ, பின்போ வெளியிடுங்கள் என்று ராகேஷ் தெரிவித்துள்ளார்.

ரயீஸ்

ரயீஸ்

ஷாருக்கான் தனது படத்தின் ரிலீஸ் தேதியை தீர்மானிக்கும் முன்பு என்னை இரண்டு முறை சந்தித்து பேசினார். காபில் ரிலீஸ் அன்று ரயீஸை வெளியிட வேண்டாம் என்று நான் கூறியபோது தலையை ஆட்டிய அவர் அதன் பிறகு ஜனவரி 25ம் தேதியே தனது படமும் வெளியாகும் என அறிவித்துள்ளார் என்கிறார் ராகேஷ்.

ரித்திக் ரோஷன்

ரித்திக் ரோஷன்

ஷாருக்கானின் ஜூனியர் ரித்திக். அவர் வேண்டுமானால் தனது சக வயது நடிகர்களான ஆமீர் கான் மற்றும் சல்மான் கானுடன் மோத வேண்டியது தானே. அதை விட்டுவிட்டு காபில் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றச் சொல்கிறார். ரிலீஸ் தேதியை நான் மாற்றினால் என் படம் பிளாப் ஆகும் என்ற சென்டிமென்ட் உள்ளது என ராகேஷ் கூறியுள்ளார்.

English summary
Bollywood producer Rakesh Roshan is not happy with Shah Rukh Khan as he is releasing Raees on the same date as Hrithik's Kaabil.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos