»   »  ஆம், கத்ரீனாவும் நானும் காதலிக்கிறோம்... அடுத்தாண்டு "டும் டும் டும்" : ரன்பீர் கபூர் அறிவிப்பு

ஆம், கத்ரீனாவும் நானும் காதலிக்கிறோம்... அடுத்தாண்டு "டும் டும் டும்" : ரன்பீர் கபூர் அறிவிப்பு

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ''கத்ரீனாவும், நானும் காதலிக்கிறோம்; அடுத்தாண்டு எங்களுக்கு திருமணம் நடக்க உள்ளது,'' என பிரபல நடிகர் ரன்பீர் கபூர் அறிவித்துள்ளார்.

நடிகர் ரிஷி கபூரின் மகன் பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூர் ( 33). இவரும், பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான கத்ரீனா கைப்பும் (31) காதலித்து வருவதாக நீண்ட நாட்களாக பேச்சு உள்ளது.

காதலர்கள் இருவரும் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஜோடியாக வலம் வந்தனர். அந்தப் புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியாயின. ஆனால், இது தொடர்பாக இருவரும் விளக்கம் ஏதும் தரவில்லை. தொடர்ந்து மவுனம் சாதித்து வந்தனர்.

இந்நிலையில், பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு ரன்பீர்கபூர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தனது காதல் குறித்து மனம் திறந்துள்ளார்.

அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது :-

உண்மை தான்...

நானும், கத்ரீனாவும் காதலிப்பது உண்மை தான். தற்போது, இருவருக்குமே கணிசமான படங்கள் கைவசம் உள்ளன. இதனால், திருமணத்தை தள்ளி போட்டுள்ளோம்.

 

 

அடுத்தாண்டு திருமணம்...

கண்டிப்பாக, அடுத்தாண்டு திருமணம் நடக்கும். இருவீட்டாரும், இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இது தான் சரியான வயது...

எனக்கு 33 வயதாகி விட்டது. இல்லற வாழ்க்கையை துவங்குவதற்கு இது தான் சரியான நேரம் என நினைக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

3 படங்களில் ஜோடி...

ரன்பீர் கபூர், பஞ்சாப்பை பூர்விகமாக உடையவர். கத்ரீனாவின் தந்தை, முகமது கைப் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர், தாயார் பிரிட்டனைச் சேர்ந்தவர். கத்ரீனாவும், ரன்பீர் கபூரும் இதுவரை மூன்று படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

முன்பு தீபிகாவுடன்...

ரன்பீர் கபூரும், தீபிகா படுகோனேவும் முன்பு காதலித்து வந்ததாக கூறப்பட்டது. அதேபோல கத்ரீனா கைப், சல்மான் கானுடன் மிகவும் நெருக்கமாக நீண்ட காலம் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எப்படி அரசியலில் நிரந்தர எதிரிகள் இல்லையோ.. அதேபோல, காதலிலும் நிரந்தர காதலர்கள் இல்லை போலும்!

 

English summary
Actor Ranbir Kapoor has finally confirmed his relationship with actress Katrina Kaif after years of dodging media speculations and also revealed he will marry her by the end of next year.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos