»   »  எஸ் 3 ரிலீஸ் தள்ளிப் போனதற்கு டப்பு லேதண்டி, குடும்பம் காரணமாம்!

எஸ் 3 ரிலீஸ் தள்ளிப் போனதற்கு டப்பு லேதண்டி, குடும்பம் காரணமாம்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: எஸ் 3 படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப் போட்டதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன் நடித்துள்ள எஸ் 3 படம் நவம்பரில் ரிலீஸாகும் என்று கூறினார்கள். பின்னர் டிசம்பர் 16ம் தேதி ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்பட்டது.


S3 release postponed: Suriya reveals the reason

இந்நிலையில் ரிலீஸ் தேதி டிசம்பர் 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மோடியின் அதிரடி நடவடிக்கையால் மக்கள் கையில் பணம் இல்லாமல் திண்டாடுவதால் எஸ் 3 ரிலீஸ் தேதி தள்ளிப் போயிருக்கும் என்று பேசப்பட்டது.


படத்தின் தெலுங்கு பதிப்பான எஸ் 3 யமுடுவின் செய்தியாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் இன்று நடந்தது. அதில் கலந்து கொண்ட சூர்யா கூறுகையில்,


ராம் சரணின் த்ருவா படம் எங்கள் குடும்ப படம் போன்று. அந்த படத்தின் ரிலீஸுக்காக தான் எஸ் 3 படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டது. ராம் சரணுக்கு இது முக்கியமான படம். அவருக்கு என் வாழ்த்துக்கள் என்றார்.


ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கே த்ருவா என்பது குறிப்பிடத்தக்கது. த்ருவா வரும் 9ம் தேதி ரிலீஸாகிறது.

English summary
Actor Suriya revealed the reason behind the sudden postponement of his movie S3.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos