»   »  ஆசைப்பட்டும் கலாமை சந்திக்காமல் போய்விட்டேனே: சல்மான் கான் வருத்தம்

ஆசைப்பட்டும் கலாமை சந்திக்காமல் போய்விட்டேனே: சல்மான் கான் வருத்தம்

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மக்களின் குடியரசுத் தலைவர் என்று அழைக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடந்த திங்கட்கிழமை மரணம் அடைந்தார். அவரது மறைவை நினைத்து இந்திய மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் கலாம் பற்றி பாலிவுட் நடிகர் சல்மான் கான் ட்விட்டரில் கூறுகையில்,

முடியலையே

கலாம் சாபை சந்திக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் மீது நான் அன்பும், மரியாதையும் வைத்திருந்தேன்.

 

 

கலாம்

ஒரு விஞ்ஞானியாக, குடியரசுத் தலைவராக கலாம் பல தலைமுறை இந்தியர்களுக்கு உத்வேகமாக இருந்தார்.

ஆசிரியர்

கலாம் சாப் ஒரு சிறந்த ஆசிரியராக திகழ்ந்தார். அவர் கடைசியாக தனது ட்விட்டர் கணக்கில் ஐஐஎம் செல்வதாக தெரிவித்திருந்தார்.

 

 

சந்திப்பு

யாரையாவது சந்திக்க வேண்டும் என்று உங்கள் இதயம் கூறினால் தாமதிக்காதீர்கள். கலாம் சாபை சந்திக்க வேண்டும் என்று விரும்பினேன். அவரை சந்திக்க நான் முயற்சி செய்திருக்க வேண்டும். என் இழப்பு.

மிஸ்

நான் கலாம் சாபை மிஸ் பண்ணுவேன். இந்தியா அவரை மிஸ் பண்ணும் என்று சல்மான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood superstar Salman Khan has expressed his deep regret on not meeting former President APJ Abdul Kalam, saying he should have made the effort to see him.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos