»   »  மறுபடியும் முதல்லா இருந்தா?... சல்மானுடன் ஜோடியாக வந்த மாஜி காதலி சங்கீதா பிஜ்லானி

மறுபடியும் முதல்லா இருந்தா?... சல்மானுடன் ஜோடியாக வந்த மாஜி காதலி சங்கீதா பிஜ்லானி

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: அஸாருதீனை விட்டுப் பிரிந்து விட்ட அவரது மாஜி மனைவி சங்கீதா பிஜ்லானி, நடிகர் சல்மான் கானுடன் ஜோடியாக காரில் வந்தது புது சலசலப்பைக் கிளப்பியுள்ளது. சல்மான் கானை ஒரு காலத்தில் விழுந்து விழுந்து காதலித்தவர் சங்கீதா என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் நடந்த பாகுபலி சிறப்புத் திரைப்படக் காட்சியின்போதுதான் இருவரும் இணைந்து காணப்பட்டனர். இருவரையும் சேர்த்து புகைப்படம் எடுக்க புகைப்படக்காரர்கள் முயன்றபோது சல்மானை விட்டு விலகிப் போய் விட்டார் சங்கீதா.

அஸாருதீனை விட்டுப் பிரிந்த பின்னர் சங்கீதாவுக்குத் தேவையானதை சல்மான்தான் செய்து வருவதாக ஒரு தகவல் ஏற்கனவே உள்ளது என்பதால் இந்த சந்திப்பு அதை உறுதிப்படுத்துவது போல உள்ளது.

மிஸ் இந்தியா

1980ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்றவர் சங்கீதா பிஜ்லானி. இதையடுத்து அவர் நடிக்க வந்தார். 80களின் இறுதியில் அவரும் சல்மான் கானும் தீவிரமாக காதலித்தனர். 90களின் ஆரம்பம் வரை இது நீடித்தது.

அஸாருடன் திருமணம்

அதன் பின்னர் சல்மானை விட்டுப் பிரிந்தார் சங்கீதா. அதைத் தொடர்ந்து அஸாருதீனை காதலித்தார். அவரையே திருமணமும் செய்து கொண்டார். பின்னர் இந்த ஜோடி பிரிந்து போனது.

மீண்டும் நட்பு

அஸாருதீனை விட்டுப் பிரிந்த பின்னர் சங்கீதாவுக்குத் தேவையானதை சல்மான் கான் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இருவரும் மீண்டும் நட்பாக பழகத் தொடங்கியுள்ளனராம்.

சல்மானை விட மூத்தவர்

சல்மான் கானை விட வயதில் மூத்தவர் சங்கீதா பிஜ்லானி. இருப்பினும் இந்த வயது வித்தியாசம் இவர்களின் நட்புக்கும், காதலுக்கும் எப்போதும் தடையாக இருந்ததில்லை.

பாகுபலி படத்தின்போது

இந்த நிலையில் மும்பையில் நடந்த பாகுபலி சிறப்புக் காட்சியின்போது சல்மானும், சங்கீதாவும் ஒரே காரில் சேர்ந்து வந்தனர். இதைப் பார்த்த புகைப்படக்காரர்கள் அவர்களைப் படம் பிடிக்க ஆயத்தமானார்கள்.

ரெடியான சல்மான்.. விலகிப் போன சங்கீதா

இருவரையும் சேர்த்துப் படம் பிடிக்க விரும்புவதாக சல்மானிடம் அவர்கள் கேட்க, அதற்கு சல்மானும் அனுமதி கொடுத்த போஸ் கொடுக்க வருமாறு சங்கீதாவை அழைத்தார். ஆனால் சங்கீதா அவர் கூப்பிட்டது காதில் விழாதது போல நகர்ந்து போய் விட்டார். அவருக்கு சல்மானுடன் சேர்ந்து போஸ் தர விருப்பமில்லை என்று தெரிகிறது.

சல்மானின் காதல்கள்

சல்மானின் காதல்களை பெரிய பட்டியலே போடலாம். அவரது நட்பு வட்டாரத்திலிருந்து காதல் வட்டாரத்தில் விழுந்தவர்களில் சங்கீதா, ஐஸ்வர்யா ராய், காத்ரீனா கைப் ஆகியோர் முக்கியமானவர்கள்.

English summary
Salman Khan is always in news for his affairs. Recently, the actor was spotted with his ex girlfriend Sangeeta Bijlani, who avoided getting clicked with the superstar. Salman Khan and Sangeeta Bijlani attended the special screening of Baahubali. At the screening media tried to click their photographs but Sangeeta tried to hide from the reporters.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos