»   »  ஒரு காலத்தில் பரபரப்பான ஹீரோயின்களுடன் அடுத்தடுத்து இணையும் சந்தானம்...

ஒரு காலத்தில் பரபரப்பான ஹீரோயின்களுடன் அடுத்தடுத்து இணையும் சந்தானம்...

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை : இப்போது சந்தானம் காமெடியன் மட்டுமல்ல, ஹீரோவும் கூட. அவரது படங்களில் லேட்டஸ்ட் முன்னணி நடிகைகள் யாரும் இதுவரை ஜோடியாகவில்லை என்றபோதிலும் ஒரு காலத்தில் பரபரப்பான ஹீரோயின்களாக பார்க்கப்பட்டவர்களை அடுத்தடுத்து ஜோடி சேர்த்து நடித்து வருகிறார் சந்தானம்.

முன்பு "காதல்" நாயகி சந்தியா ஜோடியாக நடித்தார். இப்போது "தாமிரபரணி" பானு ஜோடியாகிறார்.

‘வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க' படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக பானு நடிக்கிறாராம்.

மெயின் ஜோடி ஆர்யா - தமன்னா

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் படம் ‘வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க'. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இப்படத்தின் மூலம் ஆர்யா - தமன்னா ஜோடி முதன்முறையாக ஜோடி சேர்கின்றனர்.

ராஜேஷ் பாணி கலகல படம்

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா பட வரிசையில், வழக்கம் போல எம்.ராஜேஷின் இப்படத்திலும் ஹீரோவின் நண்பராக சந்தானம் நடிக்கிறார்.

சந்தானத்திற்கும் ஜோடி...

இப்படத்தில் ஆர்யாதான் வாசு, சந்தானம் தான் சரவணன். படத்துல ஆர்யாவை போல் சந்தானத்துக்கும் ஜோடி உண்டாம்.

தாமிரபரணி பானு...

சந்தானத்திற்கு ஜோடியாக, ‘தாமிரபரணி' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த பானுவை ஒப்பந்தம் செய்துள்ளார்கள். வித்தியாசமான வேடம் என்பதால் பானுவும் சம்மதம் கூறி விட்டாராம்.

 

 

மூன்று பேர் மூன்று காதல்...

தாமிரபரணி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் மலையாள நடிகை பானு. நயனதாரா ரேஞ்சுக்கு வருவார் என்று கூட பேச்சு அடிபட்டது. ஆனால் சிலப்பல காரணங்களால் அதிகப் படங்களில் நடிக்க முடியாத பானு, கடைசியாக நடித்த படம், ‘மூன்று பேர் மூன்று காதல்'.

 

 

படப்பிடிப்பு...

தற்போது வி.சி.ஒ.பி. படத்தில் ஆர்யா, தமன்னா சம்பந்தப்பட்ட மான்டேஜ் பாடல் ஒன்றை சென்னையில் படமாக்கி வருகிறார்கள். அது முடிந்ததும் விரைவில் சந்தானம், பானு இணைந்து நடிக்கும் காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள்.

யா யா...

ஏற்கனவே, யா யா படத்தில் சந்தானத்தின் ஜோடியாக ‘காதல்' சந்தியா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து யாரு

அடுத்து சந்தானத்திற்கு யார் ஜோடியாகப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அவரை விட அவரது ரசிகர்களுக்குத்தான் அதிகம் உள்ளது.

English summary
Bhanu of 'Thamirabharani' fame will play Santhanam's love interest in 'Vasuvum Sivavum Onna Padichavanga' (VSOP), directed by M Rajesh.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos