twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாதுகாவலருடன் மோதல் வழக்கு: ஷாருக்கான் வயிற்றில் பாலை வார்த்த மும்பை போலீஸ்

    By Siva
    |

    மும்பை: 2012ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளின்போது மும்பையில் உள்ள வாங்கடே ஸ்டேடியத்தில் பாதுகாவலருடன் மோதிய வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.

    ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். 2012ம் ஆண்டு மும்பையில் உள்ள வாங்கடே ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டி நடந்தபோது ஷாருக்கான் அரங்கத்தின் பாதுகாவலருடன் மோதினார்.

    Shah Rukh Khan gets clean chit by Mumbai police in Wankhede brawl case

    அன்றைய போட்டியில் அவரின் கொல்கத்தா அணி வென்ற பிறகு அவருடைய குழந்தைகள் மற்றும் நண்பர்கள் மைதானத்திற்குள் வந்தனர். இதை பார்த்த பாதுகாவலர் விகாஸ் தால்வி அவர்களை வெளியே செல்லுமாறு கூறினார். உடனே ஷாருக்கான் கோபம் அடைந்து அவருடன் சண்டைக்கு பாய்ந்தார்.

    இதையடுத்து ஷாருக்கான் வாங்கடே ஸ்டேடியத்திற்குள் நுழைய 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. அந்த தடை கடந்த ஆண்டு நீக்கப்பட்டது. இதற்கிடையே இது குறித்து உள்ளூர் ஆர்வலர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    அந்த வழக்கில் போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் கூறியிருப்பதாவது, விசாரணையில் தன் மீது சுமதப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஷாருக்கான் மறுத்துள்ளார். வாரண்ட் இல்லாமல் கைது செய்யும் அளவுக்கு அவர் எந்த குற்றமும் செய்யவில்லை என்று கூறி ஷாருக்கான் வயிற்றில் பாலை வார்த்துள்ளனர் போலீசார்.

    English summary
    The Mumbai police have informed a metropolitan magistrate’s court that no ‘cognisable offence’ was made out against Bollywood superstar Shah Rukh Khan in connection with a brawl at the Wankhede stadium here after an IPL match in 2012.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X