Don't Miss!
- News திருப்பியடித்த இஸ்ரேல்.. தெற்கு லபனானில் ஹிஸ்புல்லா மீது டிரோன் தாக்குதல்.. 2 பேர் பலி.. ஹை டென்ஷன்
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விமான விபத்தில் நடிகர் ஷாருக்கான் மரணம்: தீயாக பரவிய வதந்தியால் பரபரப்பு
மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் விமான விபத்தில் பலியாகிவிட்டதாக வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் ஷாருக்கிற்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடிக்கிறார்.
இந்நிலையில் ஷாருக் பற்றிய வதந்தி தீயாக பரவியது.
மரணம்
பாரீஸில் தனது உதவியாளர்களுடன் ஷாருக்கான் தனி விமானத்தில் பயணம் செய்தார். விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் அவர் பலியானார் என்ற வதந்தி தீயாக பரவியது.
ஷாருக்கான்
ஷாருக்கான் பயணம் செய்த விமானத்தின் எண், நிறுவனத்தின் பெயர் எல்லாம் குறிப்பிட்டிருந்ததால் பலர் அது உண்மையோ என நினைத்து கவலை அடைந்தனர்.
நலம்
ஷாருக்கானுக்கு எதுவும் ஆகவில்லை. அவர் நலமாக உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் பிரபலங்களை பற்றி மரண வதந்தி பரவுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல.
ஐஸ்வர்யா ராய்
திருமண வாழ்க்கை கசந்து போனதால் ஐஸ்வர்யா ராய் தற்கொலை செய்து கொண்டார் என்று முன்பு வதந்தி பரவியது. பின்னர் ரன்பிர் கபூருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களால் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டு ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டார் என்ற வதந்தி பரவியது. ஐஸ்வர்யாவின் மாமனார் அமிதாப் பச்சன் இறந்ததாக கூட வதந்தி பரவியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.