»   »  நல்லவேளை நீங்களாவது தாங்கி பிடிச்சீங்களே - மீடியாவுக்கு நன்றி சொல்லும் சிம்பு

நல்லவேளை நீங்களாவது தாங்கி பிடிச்சீங்களே - மீடியாவுக்கு நன்றி சொல்லும் சிம்பு

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2 வருடமாக எனது எந்தப் படமும் வராவிட்டாலும் கூட, மீடியா நண்பர்கள் இரண்டு வருடங்களாக என்னைப் பற்றி தொடர்ந்து செய்தி போட்டு என்னைத் தாங்கி பிடித்தார்கள் என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார்.

சந்தானம் ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள இனிமே இப்படித்தான் பட ஆடியோ ரிலிசின் போதுதான் சிம்பு இப்படிப் பேசினார்.

இரண்டு வருடங்களாக படங்கள் எதுவும் கொடுக்காத நிலையில் விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்த நடிகர் சிம்பு தான் அறிமுகம் சந்தானத்தின் பட ஆடியோ விழாவில் கலந்து கொண்டார் சிம்பு.

இந்த நிகழ்ச்சியில் சிம்புவின் பேச்சைக் கேட்டவர்கள் சிம்புவா இப்படி பேசுவது? என்று இன்ப அதிர்ச்சி அடையும் அளவிற்கு பக்குவப்பட்ட ஒரு மனிதனாக அவரின் பேச்சு இருந்தது.

சிம்புவின் அறிமுகம்

இயக்குனர் டி.ராஜேந்திரரின் மகனாக இருந்ததால் சினிமாவில் எந்த வித கஷ்டமும் படாமலேயே காதல் அழிவதில்லை படத்தின் ஹீரோவாக தன் தந்தையாலேயே அறிமுகம் செய்யப்பட்டவர் சிம்பு. படம் சுமாராக ஓடினாலும் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

தப்பிய தம்

அதற்கடுத்து வெளிவந்த தம் திரைப்படம் சொல்லிக் கொள்ளும்படி இருந்தாலும் தொடர் தோல்விப் படங்களாக அலை, சரவணா, காளை போன்ற படங்கள் அமைந்தன .

இளம் இயக்குனர்

இளம் வயதிலேயே மன்மதன், வல்லவன் போன்ற படங்களைத் தயாரித்து இயக்கத்திலும் வெற்றி கண்டவர். பாடகர் நடிகர், இயக்குனர் என்று பன்முகத் திறமைகள் இருந்தாலும் இவரின் நேரமோ என்னவோ தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

கவிழ்த்த காதல்கள்

இன்று முன்னணி நடிகையாக விளங்கும் நயன்தாரா வல்லவன் படத்தில் நடித்த போது சிம்புவை காதலித்தார் காதல் கைகூடவில்லை. நீண்ட வருடங்கள் கழித்து வாலு படத்தில் நடித்த போது நடிகை ஹன்சிகாவை காதலித்து கடைசியில் காதலுடன் சேர்ந்து படமும் பாதியிலேயே நின்று விட்டது.

இக்கரைக்கு அக்கரை பச்சை

விண்ணைத் தாண்டி வருவாயா படம் இவருக்கு கொடுத்தது ஏராளம் விருதுகள் ,ரசிகர்கள் என்று இந்த ஒரே படத்தின் மூலம் இவரை உச்சத்தில் கொண்டு சென்ற பெருமை இயக்குனர் கவுதமையே சேரும்.

அடுத்த படத்திற்குக் காத்திருப்பு

கவுதமின் அடுத்த படத்தில் சிம்பு நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென கெளதமுக்கு அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு வர மனிதர் எஸ்கேப்.

பல வருடங்களாக எடுக்கப்படும் படம்

இது நம்ம ஆளு என்ற பெயரில் சிம்புவையும் நயந்தாராவையும் தனது படத்தில் ஜோடி சேர்த்த பாண்டிராஜ் படத்தை விடவும் முடியாமல் முடிக்கவும் முடியாமல் தவிப்பது தனிக் கதை .

மீடியாவின் செல்லப் பிள்ளை

இந்த நிலையில்தான் மீடியாவைப் பாராட்டியுள்ளார் சிம்பு. இரண்டு வருடங்களாக எந்த படமும் வரா விட்டாலும் தொடர்ந்து இவரைப் பற்றி தினசரி செய்தி கொடுக்க தவறுவதில்லை மீடியா இதனால் என்னை தங்கிப் பிடித்தது மீடியா என்று மனிதர் உருக்கம் காட்டுகிறார்.

கைவிட்ட காதலி

கைவிட்ட காதலி என்று மறைமுகமாக சிம்பு குறிப்பிடுவது ஹன்சிகாவைத்தான். நாங்க ரெண்டு பெரும் காதலிக்கிறோம் என்று பத்திரிக்கையின் வாயிலாக மற்றவர்களுக்கு தெரிவித்த சில
மாதங்களிலேயே நாங்க பிரிஞ்சிட்டோம் என்று அதே பத்திரிக்கையின் வாயிலாகவே முடித்துக் கொண்டனர் .

 

 

முன்னணி நடிகைகள்

இவரின் முன்னால் காதலிகள் நயன்தாரா, ஹன்சிதா இருவரும் இன்று கோலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகைகளாக இருக்க சிம்பு படமே இல்லாமல் தவிப்பது சோகமே .

காசு கூட இல்லையாமே

நிகழ்ச்சியில் பேசும்போது சிம்பு இப்படி ஒரு வார்த்தை சொன்னார்.. நான் சம்பளத்தையெல்லாம் எனது அம்மாவிடம்தான் கொடுப்பேன். ஆனால் இப்போது செலவுக்கு அவரிடம் காசு கேட்கவே சங்கடமாக இருக்கிறது என்று...!

இவரால் காமெடியனாக அறிமுகம் செய்யப்பட்ட சந்தானம் இன்று ஹீரோ. .ஆனாலும் ஒரு மனிதனுக்கு இவ்வளவு கஷ்டங்கள் வரக் கூடாது!

 

English summary
Last 2 years not releasing my movie but the media people is always supported for me Actor silambarasan statement.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos