» 

அஜீத்துக்காக வாலு ரிலீஸை தள்ளிப்போட்ட சிம்பு

Posted by:
 

சென்னை: அஜீத் குமாரின் ஆரம்பம் படம் தீபாவளிக்கு ரிலீஸாவதையடுத்து தனது படமான வாலுவின் ரிலீஸை தள்ளிப் போட்டுள்ளாராம் சிம்பு.

அஜீத் குமார், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோர் நடித்துள்ள ஆரம்பம் படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகிறது. அதே நாளில் கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகு ராஜாவும், ஆர்யாவின் இரண்டாம் உலகமும் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் தீபாவளிக்கு ரிலீஸாகவிருந்த சில படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப் போடப்பட்டுள்ளது.

அஜீத் ரசிகர்

நான் எல்லாம் 'தல' ரசிகராக்கும் என்று சொல்லித் திரிபவர் சிம்பு என்பது அனைவரும் அறிந்ததே.

தீபாவளிக்கு வாலு

நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த சிம்புவின் வாலு படம் ஒரு வழியாக தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது.

அஜீத்துக்காக

அஜீத் படத்துடன் தன் படம் மோத வேண்டாம் என்று நினைத்த சிம்பு வாலு படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப் போட்டுவிட்டாராம்.

ஹன்சிகா

வாலு படத்தில் சிம்புவுடன் அவரது காதலி ஹன்சிகா நடித்துள்ளார். சிம்புவும், ஹன்சிகாவும் தங்கள் காதலை அறிவித்த பிறகு வாலு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: simbu, ajith, vaalu, சிம்பு, அஜீத், வாலு
English summary
Simbu, a diehard fan of Ajith has postponed the release of his movie Vaalu to avoid clash with Aarambam.

Tamil Photos

Go to : More Photos