twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எல்லோருக்கும் 40-45 வயதில் நடக்க வேண்டியது எனக்கு 29ல் நடந்துவிட்டது: சிம்பு

    By Siva
    |

    சென்னை: எல்லோருக்கும் 40 முதல் 45 வயதில் நடக்க வேண்டியது தனக்கு 29 வயதில் நடந்துள்ளது என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

    சிம்பு தனது முன்னாள் காதலி நயன்தாராவுடன் சேர்ந்து நடிக்கும் இது நம்ம ஆளு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நயன், சிம்பு இடையே மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாகக் கூட செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில் இது குறித்து சிம்பு கூறுகையில்,

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    ஒரு ஹீரோவும், ஹீரோயினும் காதலிக்கிறார்க்ள் என்று செய்தி வெளியானால் அவர்கள் ஜோடியாக நடிக்கும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துவிடும். அத்தகைய எதிர்பார்ப்பு இது நம்ம ஆளு படத்திற்கும் ஏற்பட்டுள்ளது.

    விஜய்

    விஜய்

    எனக்கு ரஜினி மற்றும் அஜீத்தை மிகவும் பிடிக்கும். அதற்காக விஜய்யை வெறுக்க வேண்டும் என்று நினைப்பது தவறு.

    தனுஷ்

    தனுஷ்

    தனுஷ் தனது கடின உழைப்பால் முன்னேறி தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். அவர் எனக்கு போட்டி தான். ஆனால் அவர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்கிறேன்.

    ஹன்சிகா

    ஹன்சிகா

    முதல் முறை கத்திகுத்து வாங்கினால் தான் வலிக்கும். அது போன்று இரண்டாவது முறை காதல் தோல்வி ஏற்பட்டதால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

    ஆன்மீகம்

    ஆன்மீகம்

    என்னுள் ஆன்மீக வழியில் சில மாற்றங்கள் நடந்துள்ளது. எல்லோருக்கும் 40 முதல் 45 வயதில் நடக்க வேண்டியது எனக்கு 29 வயதிலேயே நடந்திருக்கிறது.

    அரசியல்

    அரசியல்

    நான் மக்களுக்காக பாடுபடுவேன். அதற்காக நான் அரசியலுக்கு வர மாட்டேன். அது எனக்கு பிடிக்கவும் செய்யாது. பணம் இருந்தால் மக்கள் சேவை செய்யலாம். நானும் மக்கள் சேவையை துவங்கப் போகிறேன் என்றார் சிம்பு.

    English summary
    Simbu told that the things that normally happen to people aged between 40-45 happened to him in 29 years itself.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X