twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்தக் கால நடிகர்களும் "மெல்லிசா ஒரு கோடு" வைத்திருந்தார்கள்... மூக்குக்கு கீழே!

    |

    சென்னை: என்னை அறிந்தால் பட டிரைலர் வெளியானதில் இருந்தே மிகவும் பிரபலமாகி விட்டது ‘மெல்லிசா ஒரு கோடு...' டயலாக்.

    அப்படத்தில் அஜீத், ‘மெல்லிசா ஒரு கோடு...' என்பதை பல இடங்களில் பயன்படுத்தி இருப்பார். அதனைத் தொடர்ந்து அப்படத்தின் வில்லன் அருண் விஜய் மீண்டும் நாயகனாக நடிக்கப் போகிறாரா, அல்லது வில்லனாகத் தொடரப் போகிறாரா என்பதை பலர் டீசண்டாக இப்படித் தான் கேட்டார்கள்.

    போதாக்குறைக்கு புதிய படமொன்றில் நடிகர் ராஜேந்திரனும் இதே டயலாக்கை காமெடியாகப் பேசி மேலும் பிரபலமாக்கியிருக்கிறார்.

    அந்தக் கால நடிகர்களுக்கும் இது போல ஒரு மெல்லிசான கோடு இருந்தது... ஆனா அது மூக்குக்குக் கீழே இருந்தது... அதுகுறித்த ஒரு அகழ்வாராய்ச்சி இது....

    மூக்குக்கு கீழே கோடு...

    மூக்குக்கு கீழே கோடு...

    அந்தக் கால நடிகர்களில் பெரும்பாலானோர் மீசையை வளர்க்க மாட்டார்கள்.. மாறாக கருப்பு மையால் வரைந்திருப்பார்கள். அதுவும் சன்னமான கோடு போட்டு.

    மையை எடு கோட்டைப் போடு

    மையை எடு கோட்டைப் போடு

    கருப்பு மையை எடுத்து நெட்டுக்கு இந்தப் பக்கம் ஒரு இழுப்பு.. அந்தப் பக்கம் ஒரு இழுப்பு... நடுவே ஒரு கேப்... அவ்வளவுதாங்க தோசை ரெடி.. ஸாரி.. மீசை ரெடி.!

    முன்னணி நாயகர்கள்...

    முன்னணி நாயகர்கள்...

    முக்கிய நடிகர்களில் பலரும் இது போலவே மெல்லிய வரைந்த மீசையுடனேயே வலம் வந்தார்கள். அந்தக் கால ரசிகர்களும் அதனை ஏற்றுக் கொண்டார்கள்.

    அடிக்கும் நிறத்தில் லிப்ஸ்டிக்...

    அடிக்கும் நிறத்தில் லிப்ஸ்டிக்...

    கருப்பு மையால் வரைந்த மீசை பளிச்சென தெரியும் படி, அடிக்கும் நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கலர் கலராய் பயமுறுத்தியவர்களும் உண்டு.

    கருப்பு சிவப்பு வெள்ளையில்

    கருப்பு சிவப்பு வெள்ளையில்

    அதிலும் எம்.ஜி.ஆர் நடித்த கலர் படங்களில், பாடல் காட்சிகளில், ஹீரோயின்களை விட எம்.ஜி.ஆரின் மீசை, உதடுகளை அடிக்கடி குளோசப்பில் காட்டுவார்கள்.. என்னடா என்று உற்றுப் பார்த்தால் கருப்பு மீ்சை, லிப்ஸ்டிக் பூசிய சிவப்பு உதடு, நடுவே வெள்ளைக் கலர் தோல் என அவரது கட்சிக் கலரை நினைவூட்டவே இந்த குளோசப் மிரட்டல் என்று தெரிய வரும்.!

    பாரபட்சமே இல்லாமல்

    பாரபட்சமே இல்லாமல்

    வில்லன், ஹீரோ, காமெடியன் என மீசை வரைவதில் பாராபட்சமே காட்டவில்லை அந்தக் கால நடிகர்கள். ஹீரோவாக இருந்தால் மீசையை நேராக, நீட்டாக வரைந்திருப்பார்கள். காமெடியன்களுக்கு தொங்குவது போல வரைவார்கள். வில்லன்களாக இருந்தால் கோட்டை மேலே ஒரு இழு இழுத்து முறுக்கி விட்டு விடுவார்கள்.

    முடிவுக்கு வந்தது...

    முடிவுக்கு வந்தது...

    காலப்போக்கில் பொய் மீசைக்குப் பதில் உண்மை மீசையுடன் நாயகர்கள் வரத் தொடங்கியதால், இந்த மீசை பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது.

    வடிவேலு மட்டும்...

    வடிவேலு மட்டும்...

    ஆன போதும், "முன்னோர்களின்" நினைவாக வடிவேலு மட்டும் சில படங்களில் கிச்சு கிச்சு மூட்டுவதற்காக பென்சிலால் மீசை வரைந்து மக்களை சிரிக்க வைத்தார். அதிலும் ரொம்பப் பிரபலம் வின்னர் படத்தில் வந்த கைப்புள்ளதான்.... அந்த மீசையையும் போண்டா மணி அழித்து விளையாடி அடி வாங்குவார்!

    English summary
    The Tamil old actors have draw a small line in the upper lips as their mustache.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X