» 

மீண்டும் இரண்டு கெட்டப்புகளில் தோன்றும் சூர்யா!

Posted by:
 

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாஸ் படத்திலும் இரட்டை கெட்டப்புகளில் தோன்றப் போகிறாராம் சூர்யா.

'அஞ்சான்' படத்திற்குப் பிறகு சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கும் 'மாஸ்' படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் எமி ஜாக்சன் நடிக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

மீண்டும் இரண்டு கெட்டப்புகளில் தோன்றும் சூர்யா!

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு இரண்டு விதமான கெட்டப்புகளாம்.

ஒரு கெட்டப்பில் நீளமான முடி வைத்திருக்கும் கெட்டப்பில் வருகிறார் சூர்யா. மற்றொரு தோற்றம், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாம்.

இதற்காக மும்பையிலிருந்து ஸ்பெஷல் ஹேர் ஸ்டைலிஸ்ட் வரவழைக்கப்பட்டுள்ளாராம்.

இரு வேறு கெட்டப்புகளில் நடிப்பதில் சூர்யா தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கு முன் ஏழாம் அறிவு, மாற்றான், அஞ்சான் போன்ற படங்களில் அவர் இரட்டை அல்லது இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார்!

Read more about: venkat prabhu, surya, mass, சூர்யா, வெங்கட் பிரபு
English summary
Actor Surya is once again appearing in dual get up in Venkat Prabhu's Mass movie.

Tamil Photos

Go to : More Photos