» 

சம்பளம்.. விஜய், அஜீத்தை மிஞ்சிய சூர்யா!

Posted by:

இன்றைய தேதியில் ரஜினி, கமல் தவிர்த்து, சம்பளம் வாங்குவதில் முன்னணியில் உள்ள நடிகர் யார் தெரியுமா?

விஜய்யோ, அஜீத்தோ அல்ல.... சூர்யா.

தமிழ் சினிமாவில் நட்சத்திரங்களின் அந்தஸ்தை நிர்ணயிப்பது வெற்றிகளும் நிர்ணயிக்கப்படும் சம்பளமும் மட்டும்தான்.

ஏரியா உரிமை

ஒரு படம் ஹிட் அடித்து விட்டால், தனது சம்பளத்தை உயர்த்திக் கொள்வது திரை நட்சத்திரங்களுக்கு வழக்கமாகிப் போய்விட்டது. அதுமட்டுமின்றி சில நடிகர்கள் சம்பளத்துடன் சில ஏரியாக்களின் விநியோக உரிமையும் வாங்கிக் கொள்கிறார்கள்.

சிங்கம் 2

ஏழாம் அறிவு, மாற்றான் என அடுத்தடுத்து தோல்வியால் ஆட்டம் கண்ட சூர்யாவின் மார்க்கெட்டை மீண்டும் தூக்கிவிட்டது 'சிங்கம்-2' வெற்றி .

இதற்கு இணையான பெரிய வெற்றியை சூர்யாவின் வரிசையில் உள்ள வேறு எந்த நடிகரின் படமும் பெறவில்லை.

 

அஞ்சான்

தற்போது லிங்குசாமி தயாரித்து இயக்கும் ‘அஞ்சான்' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதில் சூர்யாவுக்கு ஜோடி சமந்தா. இந்தப் படத்தில் சூர்யாவின் தோற்றம் குறித்த ஸ்டில்கள் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் ஆர்வத்தைக் கிளறியுள்ளன.

சம்பளம் ப்ளஸ் தெலுங்கு ரைட்ஸ்

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு சம்பளம் 20 கோடிகளைத் தாண்டுகிறதாம். சூர்யா படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு உண்டு. அதனால் இப்படத்தின் தெலுங்கு ரைட்ஸையும் சூர்யா கேட்டிருக்கிறார். தயாரிப்புத் தரப்பு அதற்கும் சம்மதம் சொல்லிவிட்டதாம். சூர்யா படங்களின் தெலுங்கு உரிமை குறைந்தது 20 கோடிக்குப் போகிறது.

See next photo feature article

சம்பளம் எவ்ளோ..

அப்படியானால் சூர்யாவின் சம்பளம் எவ்ளோன்னு சொல்லுங்க பார்ப்போம்...!

Read more about: surya, anjaan, salary, சூர்யா, சம்பளம்
English summary
According to reports Surya's present salary per movie is Rs 40 cr.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos