» 

தமிழில் கோடீஸ்வரன் நிகழ்ச்சி... பிரபல டிவியில் நடத்துகிறார் சூர்யா!

Posted by:

இந்தியில் பிரபலமான கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தமிழில் பிரபல சேனலில் நடத்துகிறார் நடிகர் சூர்யா. இதன் மூலம் அவர் சின்னத் திரையிலும் கால் பதிக்கிறார்.

உலகின் பல்வேறு நாடுகளில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி 'கோன் பனேகா குரோர்பதி'.

தமிழில் இந்த நிகழ்ச்சி கோடீஸ்வரன் என்ற பெயரில் விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்நிகழ்ச்சியை பிரபல நடிகரான சூர்யா தொகுத்து வழங்க இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியை சில ஆண்டுகளுக்கு முன்பு வடஇந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் ஹிந்தி தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கினார். அதேபோல் தமிழிலும் 'கோடீஸ்வரன்' என்ற நிகழ்ச்சியை கொண்டு வந்தார்கள். இதனை சன்டிவி நடத்த, சரத்குமார் தொகுத்து வழங்கினார். சூப்பர் ஹிட்டானது நிகழ்ச்சி.

இதைத் தொடர்ந்து இபபோது கோன் பனேகா குரோர்பதி போன்றே, 'கோடீஸ்வரன்' என்ற பெயரில் வேறு தொலைக்காட்டியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவை தேர்வு செய்துள்ளனர்.

இன்றைய தினசரிகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்களும் வெளியாகியுள்ளன.

முன்னதாக, இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் தொகுத்து வழங்குவார் என்று தகவல் வெளியானது. பேரம் படியாததால், சூர்யாவுக்குப் போய்விட்டது என்கிறார்கள்!

Read more about: surya, சூர்யா, கோடீஸ்வரன், சின்னத் திரை
English summary
Actor Surya is going to host the popular TV show Koteeswaran in a leading TV channel. Remember, it is the Tamil version of Amitabh's famous Kaun Baneka Crorepati.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos