twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆமிர் கான், மகேஷ் பாபு, சுதீப்புக்கு சூர்யா விடுத்த மை ட்ரீ சேலஞ்ச்!

    By Shankar
    |

    மம்முட்டி விடுத்த மை ட்ரீ சவாலை ஏற்று தன் வீட்டில் மரக்கன்று நட்ட நடிகர் சூர்யா, இப்போது அந்த சவாலை நடிகர்கள் ஆமிர்கான், மகேஷ்பாபு மற்றும் சுதீப்புக்கு விடுத்துள்ளார்.

    ஐஸ் பக்கெட் சவால் உலகெங்கும் பிரபலமானதால், அதே போல புதுப் புது சவால்களை பிரபலங்களும் அவர்களின் ரசிகர்களும் உருவாக்கினர்.

    ஹைதராபாதில் ஒருவர் அரிசி பக்கெட் சவாலை உருவாக்கி, பரவ வைத்தார். இதன் மூலம் பல ஏழைகளுக்கு அரிசி கிடைத்தது.

    மம்முட்டி

    மம்முட்டி

    அடுத்து நடிகர் பஹத் பாஸில் மரம் நடும் சவாலை உருவாக்கி, செயலிலும் காட்டினார். அதை பிரபலப்படுத்தியவர் மம்முட்டிதான். தன் வீட்டுத் தோட்டத்தில் மரங்களை நட்டு தண்ணீர் ஊற்றி, அந்தப் படங்களை வெளியிட்டார். இப்போது பூமிக்குத் தேவை இந்த சவால்தான் என்றார்.

    விஜய்

    விஜய்

    மேலும் நடிகர்கள் விஜய், சூர்யா போன்றவர்களுக்கும், அவர்களின் ரசிகர்களுக்கும் இந்த சவாலை விடுத்தார்.

    இதைத் தொடர்ந்து சவாலை ஏற்ற நடிகர் விஜய், சில மரக்கன்றுகளை நட்டு அந்தப் படங்களையும் வெளியிட்டார்.

    சூர்யா

    சூர்யா

    அடுத்து இப்போது சூர்யா களமிறங்கியுள்ளார். காடுகள், மரங்கள்தான் இப்போது பூமியின் மாசுபாட்டை நீக்க ஒரே வழி என்று கூறியுள்ள சூர்யா, தன் வீட்டில் மரம் நட்டு, தண்ணீர் ஊற்றினார். அந்தப் படங்களையும் வெளியிட்டுள்ளார்.

    சவால்

    சவால்

    அத்துடன் தன் சக நடிகர்களான ஆமிர்கான், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, கன்னட நடிகர் சுதீப் மற்றும் அனைத்து ரசிகர்களுக்கும் இந்த மரம் நடும் சவாலை விட்டுள்ளார்.

    English summary
    It’s ‘My Tree Challenge’ all over India and it all started with Fahadh Faasil who started off it with an innovative method to promote afforestation, thereby enhancing the world nature by planting trees. As Megastar Mammootty posed a challenge to Suriya and he has accomplished with it. Suriya is always well known for his philanthropic activities and this one was not a challenge, but a responsibility to him. On his part of planting a tree, actor Suriya says that tree planting is close to his heart as afforestation is essential for a clean and green world. He also challenged Aamir Khan, Mahesh Babu, Sudeep and their fans to take up this challenge and spread the noble cause.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X