twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    க்ளீன் இந்தியா... சல்மானின் சவாலை ஏற்பாரா ரஜினி?

    |

    மும்பை: மோடியின் அழைப்பை ஏற்று தூய்மை இந்தியா திட்டத்தில் கலந்து கொண்டு தெருக்களை சுத்தம் செய்துள்ளார் நடிகர் சல்மான் கான். அதனைத் தொடர்ந்து ரஜினி, ஆமிர்கான் உள்ளிட்ட பிரபலங்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    இம்மாதம் 2ம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று தூய்மை இந்தியா என்ற திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி. மகாத்மா காந்தியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான இதை வரும் 2019ம் ஆண்டிற்குள் நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என அவர் அப்போது தெரிவித்தார்.

    மேலும், ஐஸ் பக்கெட் சவாலைப் போன்று தூய்மை இந்தியா திட்டத்திலும் நடிகர்கள் சல்மான்கான், கமல் உள்ளிட்ட ஒன்பது பிரபலங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

    அழைப்பின் பேரில்...

    அழைப்பின் பேரில்...

    பிரதமரின் அழைப்பை ஏற்று அவர்கள் அனைவரும் தங்களது சவால்களை நிறைவேற்றி வருகின்றனர்.

    சல்மான் கான்...

    சல்மான் கான்...

    அந்தவகையில், நடிகர் சல்மான் கான் மகாராஷ்டிராவின் கர்ஜட்டில் குப்பையாக கிடந்த சில பகுதிகளைத் தூய்மைப் படுத்தினார். மேலும், சில வீடுகளுக்கு அவர் அப்போது வெள்ளையும் அடித்தார்.

    ரஜினிக்கும் அழைப்பு....

    ரஜினிக்கும் அழைப்பு....

    அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், ஆமிர் கான், ஆசிம் பிரேம்ஜி, சந்தா கோச்சர், ஓமர் அப்துல்லா உள்ளிட்ட பலரையும் போட்டிக்கு அழைத்து அவர் சவால் விட்டிருக்கிறார்.

    சவாலை ஏற்பாரா...?

    சவாலை ஏற்பாரா...?

    சல்மான் கானின் சவாலை ஏற்று ரஜினியும் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    English summary
    As part of Prime Minister Narendra Modi's Swachh Bharat Abhiyan, Bollywood Superstar Salman Khan started the initiative of the cleanliness mission at Karjat in Maharashtra on 21 October and nominated Aamir Khan, Rajinikanth and seven others to spread the message.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X