twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சேது தொடங்கி 10 என்றதுக்குள்ள வரை.... "சில்வர்" விக்ரமின் வெள்ளித்திரை அவதாரங்கள்!

    By Manjula
    |

    சென்னை: தமிழ்த் திரையுலகின் சின்ன கமலஹாசன் என்று போற்றப்படும் நடிகர் விக்ரம் திரையுலகில் வெற்றிகரமாக 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.

    ஆரம்பத்தில் 9 வருடங்கள் தன்னை திரையுலகில் நிரூபிக்க கடினமாக போராடிக் கொண்டிருந்த விக்ரம் இன்று தமிழ் சினிமாவுலகில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தைக் கொண்டிருக்கிறார்.

    வெற்றிகரமாக 25 ஆண்டுகளைத் திரையுலகில் தாண்டிய நடிகர் விக்ரமின் ஆரம்பகால வாழ்க்கை மற்றும் அவர் கடந்து வந்த பாதை ஆகியவற்றை இங்கே பார்க்கலாம்.

    கென்னடி ஜான் விக்டர்

    கென்னடி ஜான் விக்டர்

    நடிகர் விக்ரமின் முழுப்பெயர் கென்னடி ஜான் விக்டர் 1966ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் தேதி கிறிஸ்து தகப்பனாருக்கும் ஹிந்து அம்மாவுக்கும் பிறந்தவர் விக்ரம்.இவரின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, இவருக்கு அனிதா என்ற தங்கையும் அரவிந்த் என்ற தம்பியும் உண்டு.

    ஏற்காடு

    ஏற்காடு

    விக்ரமின் பள்ளிப் பதிப்பு சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மான்போர்ட் பள்ளியில் கழிந்தது. பள்ளி நாட்களிலேயே கராத்தே, நீச்சல், குதிரையேற்றம் போன்றவற்றில் விக்ரம் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார். பி.ஏ ஆங்கில பட்டப் படிப்பை சென்னை லயோலா கல்லூரியில் முடித்தார். விக்ரம் என்ற பெயரை தனது தந்தை, தாயின் ஆரம்ப எழுத்துக்களிலும் தனது இயற்பெயரான கென்னடி மற்றும் ராசியிலும் இருந்து உருவாக்கிக் கொண்டார்.

    மாடலிங்

    மாடலிங்

    லயோலா கல்லூரியில் எம்பிஏ படித்துக் கொண்டிருக்கும்போது விக்ரமின் கவனம் மாடலிங் துறையின் பக்கம் திரும்பியது. சோழா டீ, டிவிஎஸ் எச்செல், ஆல்வின் கைக்கடிகாரங்கள் போன்றவற்றிற்கு விக்ரம் மாடலாக தோன்றினார்.

    என் காதல் கண்மணி

    என் காதல் கண்மணி

    1990 ம் ஆண்டு என் காதல் கண்மணி படத்தின் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விக்ரம், டி.ஜே.ஜாய் இயக்கிய இந்தப் படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக ரேகா நம்பியார் நடித்திருந்தார். தொடர்ந்து தந்து விட்டேன் என்னை, காவல் கீதம், மீரா போன்ற படங்களில் நடித்த விக்ரமிற்கு அத்தனையும் தோல்விப் படங்களாக மாறின.

    அஜீத் தொடங்கி

    அஜீத் தொடங்கி

    ஆரம்ப காலத்தில் அஜீத், பிரசாந்த் மற்றும் பார்த்திபன் ஆகியோருடன் இணைந்து அவர்களின் படங்களில் நடித்திருக்கிறார். சக நடிகர்களான பிரபுதேவா, அஜீத் ஆகியோர்களின் படங்களுக்கு டப்பிங் வாய்ஸ் அளித்திருக்கிறார்.

    மலையாள மற்றும் தெலுங்கு

    மலையாள மற்றும் தெலுங்கு

    ஆரம்ப காலங்களில் தமிழ் தவிர்த்து மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் பிற நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். சுமார் 15 க்கும் அதிகமான பிறமொழிப் படங்களில் விக்ரம் நடித்திருந்தார்.

    சேது

    சேது

    பாலா இயக்குனராக அறிமுகமான சேது திரைப்படம் விக்ரமின் மொத்த வாழ்க்கையையும் மாற்றி எழுதியது. 1997 ம் ஆண்டு ஆரம்பித்த இந்தப் படம் சில காரணங்களால் 1999 மா ஆண்டு வெளியானது. ஆரம்பத்தில் திரையரங்குகளில் கூட்டம் அதிகமாக இல்லை ஆனால் படம் பார்த்தவர்கள் கொடுத்த நல்ல விமர்சனமானது படத்திற்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது. சென்னையில் மட்டும் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது சேது, இந்தப் படத்தின் மூலம் விக்ரமிற்கு கிடைக்க வேண்டிய தேசிய விருது 1 ஓட்டு வித்தியாசத்தில் மோகன்லாலுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.விக்னேஷின் நடிப்பில் ஆரம்பித்த சேது திரைப்படம் எதிர்பாராமல் விக்ரம் கைக்கு கிடைத்தது தனிக்கதை.

    தொடர்ந்து ஹிட் படங்கள்

    தொடர்ந்து ஹிட் படங்கள்

    சேது தொடங்கி தில், ஜெமினி, தூள், சாமி என்று வரிசையாக விக்ரமின் படங்கள் ஹிட்டடிக்கத் தொடங்கின.விக்ரமை தயாரிப்பாளர்கள் மொய்க்கத் தொடங்கினர். அன்று தொடங்கி இன்றுவரை வருகின்ற எல்லாப் படங்களையும் ஏற்காமல், நடிப்பில் வித்தியாசம் காட்டக்கூடிய படங்களை மட்டுமே விக்ரம் ஒப்புக் கொண்டுவருகிறார்.

    பிதாமகன்

    பிதாமகன்

    ஒருபக்கம் கமர்ஷியல் படங்கள் அளித்தாலும் மறுபுறம் நடிக்க வாய்ப்புள்ள படங்களையும் விக்ரம் ஏற்கத் தவறுவதில்லை. மீண்டும் பாலா இயக்கத்தில் இவர் சூர்யாவுடன் இணைந்து நடித்த பிதாமகன் திரைப்படம் சேதுவில் நழுவவிட்ட தேசிய விருதை விக்ரமிற்கு பெற்றுத் தந்தது.

    அந்நியன் தொடங்கி

    அந்நியன் தொடங்கி

    காசி, அந்நியன், பிதாமகன், தெய்வத் திருமகள் மற்றும் ஐ போன்ற படங்கள் விக்ரமின் நடிப்புத் திறமைக்கு சான்றாக அமைந்தன. இதுவரை 52 படங்களில் விக்ரம் நடித்து முடித்திருக்கிறார்.

    10 என்றதுக்குள்ள

    10 என்றதுக்குள்ள

    வரும் ஆயுத பூஜை தினத்தன்று விக்ரமின் மாறுபட்ட நடிப்பில் 10 என்றதுக்குள்ள திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. ஐ திரைப்படத்திற்குப் பின் விக்ரம் நடிப்பில் வெளியாகும் படமென்பதால் அவரது ரசிகர்கள் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.இந்தப் படத்திற்குப் பின்னர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் மர்ம மனிதன் படத்தில் விக்ரம் நடிக்கவிருக்கிறார்.

    இன்னும் நிறைய நல்ல படங்களை விக்ரம் அளிப்பார் என்ற நம்பிக்கையுடன் மேலும் பல வெற்றிகளை சீயான் பெற்றிட வாழ்த்துகிறோம்...

    Read more about: vikram விக்ரம்
    English summary
    Actor Vikram Completes 25 Years in Tamil Film Industry.He began his career working as a model and in advertising before he made his movie debut. Vikram's next most Awaiting movie 10 Enradhukulla coming 21st to hit on Screens.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X